சொன்ன மாதிரியே நான் ஓட்டுப்போட போகவில்லை. ஓடிஸாவிலிருந்து போக வர செலவு, முன்பதிவில்லா இரயில் பயணம், விடுமுறையின்மை இன்னபிற காரணங்களால் என்னால் ஓட்டுப்போட தமிழகம் போக முடியவில்லை. ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியவில்லையே என்ற வருத்தமும் கூட. ஆனால் மிக உண்ணிப்பாக தேர்தல் நிகழ்வுகளை கவனித்து வருகிறேன்.
முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகள் கேள்விக்குறியதாகத்தான் இருக்கின்றன. மத்தியில் யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதில் நடுத்தர வர்க்கம் தெளிவாகவே இருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் கீழ் மட்டத்திலுள்ள ஏழை மக்கள் யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விசுவாசமாய் ஓட்டுப் போட்டிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
என்னுடைய குடும்பம் இங்கிருந்து தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்து விட்டபடியால் என்னுடைய மனைவியின் ஓட்டு பதிவாவதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால் எங்கள் சொந்த ஊரான வேலூரிலிருந்து காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள எனது குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற வாக்களிக்க வேண்டிய நிலைமை.
மனைவியும் சளைக்காமல் பேருந்துப் பயணம் மேற்கொண்டு சென்னைக்குச் தன்ன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். அங்குள்ள எங்கள் பகுதியில் பணம் விளையாடியதாக தகவல் இல்லை என்கிறார். அவருக்கு யாரும் கொடுக்கவும் முயற்சிக்கவில்லை. காலையிலேயே சென்று ஓட்டுப்போட்டு விட்டு வேலூர் வந்து சேர்ந்து விட்டார். பதினெட்டு வயதைக் கடந்த என் மகளுக்கும் வாக்காளர் அடையாள அட்டைக்காக இணைய தளத்தின் மூலம் முயன்றேன். பதிவும் செய்தாகிவிட்டது. ஒரு மாதத்திற்கு முன்பே செய்திருந்தும் கடைசிவரை பெயர் சேர்க்க முடியாமல் போய்விட்டது.
எங்கள் வீட்டிலிருந்து இரண்டு ஓட்டுக்கள் விழவில்லை. ஆனாலும் எங்கள் குடும்பத்தில் பணச்செலவு மற்றும் பயணச்சிரமம் பாராமல் என்னுடைய கடைசி சகோதரன் பெங்களூரிலிருந்து வேலூர் வந்து ஓட்டைப்போட்டதையும், இன்னொரு சகோதரன் சென்னையிலிருந்து வேலூர் வந்து ஓட்டுப்போட்டதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். வேலூரில் உள்ள எங்கள் பகுதியிலும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையை எந்தக் கட்சியும் செய்யவில்லை என்பதும் ஆறுதலான விஷயமே!
யாருக்கு ஓட்டுப்போடப் போகிறாய் என்று மனைவியிடம் கேட்டேன். அது ரகசியம் என்று சொல்லிவிட்டார். பின்பு யாருக்கு ஓட்டுப்போடுவது என்பது உன்னுடைய உரிமை. அதில் தலையிட மாட்டேன். ஆனால் எந்த அளவுக்கு நீ யோசித்து முடிவெடுத்திருக்கிறாய் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறது என்றேன். தயக்கத்திற்குப் பிறகு சொன்னார். மாநிலக் கட்சிகளுக்கு நிச்சயம் ஓட்டில்லை. காங்கிரசுக்கும் போடப்போவதில்லை. மத்தியில் ஆட்சிமாற்றம் வேண்டும். இப்போது நீங்கள் யோசித்துக்கொள்ளுங்கள் என்றார்.
என்னால் நம்பமுடியவில்லை. செய்திகளையும் செய்தித்தாள்களையும் தொடர்ந்து பார்ப்பவர். தற்போதைய கெஜ்ரிவாலிலிருந்து மோடி, ஜெயா, ஸ்டாலின் வரை ஒரு அனுமானம் வைத்திருக்கிறார். என்னுடைய நடுநிலைமையான அலசல்களையும் கவனிப்பார். ஆனால் இப்படியோரு முடிவை எடுத்தது ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படித்தான் எல்லாருமே நினைத்திருப்பார்களோ!?
ஆக மத்தியில் ஆட்சி மாற்றம் வரக்கூடும். ஆனால் மாநிலத்தில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள்? 16-ம்தேதி வரை காத்திருக்கத்தான் வேண்டும்!
ஆக மத்தியில் ஆட்சி மாற்றம் வரக்கூடும். ஆனால் மாநிலத்தில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள்? 16-ம்தேதி வரை காத்திருக்கத்தான் வேண்டும்!
12 கருத்துகள்:
may 16 வந்தால்தான் தெரியும் ,மக்கள் நினைத்தது !
த ம 2
என்னால் நம்பமுடியவில்லை. செய்திகளையும் செய்தித்தாள்களையும் தொடர்ந்து பார்ப்பவர். தற்போதைய கெஜ்ரிவாலிலிருந்து மோடி, ஜெயா, ஸ்டாலின் வரை ஒரு அனுமானம் வைத்திருக்கிறார். என்னுடைய நடுநிலைமையான அலசல்களையும் கவனிப்பார். ஆனால் இப்படியோரு முடிவை எடுத்தது ஆச்சர்யமாக இருக்கிறது
WHAT SURPRISE FOR YOU IN THIS ?
பகவான்ஜி! மாற்றம் மத்தியில் வரும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நம் மாநிலத்தில்...
அனானி! உங்களுக்குப் புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது?
//அனானி! உங்களுக்குப் புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது//
she might have voted for AAP.. how did you decided BJP????? that is why asked why surprise. :)
other thing is - nowadays... people are not telling their spouse also the truth about their votes :)
அனானி! எங்கள் தொகுதியில் ஆம் ஆத்மியும் போட்டியிடவில்லை. பி.ஜே.பி.யும் போட்டியிடவில்லை... காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி. இப்போது சொல்லுங்கள்.
haha . confusing.. Bahujan Samaj ku potutangala :)
பயணச்சிரமம், பணத்தை பாராமல் ஓட்டு போட்ட உங்க சகோதரர்களுக்கு பாராட்டுகள். இதெல்லாம் டிவியிலும், பேப்பர்லயும் வர நாமலாம் நடிகர்களா என்ன!?
வருகைக்கு நன்றி ராஜி அவர்களே! என்னால் போகமுடியவில்லையே என்ற வருத்தம் இன்னமும் நீடிக்கிறது. யாருங்க விளம்பரத்தையெல்லாம் விரும்புறாங்க. ஏதோ நம்ம ஆத்ம திருப்திக்கு நம்முடைய பதிவுல போட்டுக்கிட்டா போதாதா?!
MDMK
Usually i vote for a good canditate and not for the party, but this time i wanted a change in the centre so i voted for a party and my wife is not intrested to know about politics and her leaders and till today i was not able to convince her to know some thing about our rulers (leaders) but she wanted to exercise her democratic right and asked for my guidance which i think is not a crime and i educated her about the present leaders and the rest was taken care by her. Bhaskar.V
வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி பாஸ்கர்! பெண்களும் நிச்சயம் அரசியலில் இறங்கியாக வேண்டும். ஆனால் ஆண்களின் கைப்பாவையாக இருக்கக்கூடாது.
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!