அறிவியல் அறிவோம்
நாம் வசிக்கும் பால்வீதியில் (Milky
way Galaxy) சுமார் 25,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. நம்
சூரிய நட்சத்திரத்தைப் போலவே கோடானுகோடி நட்சத்திரங்களைச் சுற்றிலும் கிரகங்களும்
உண்டு.
பால்வீதி என்னும் தாம்பாளத்தின் அகலம்
70,000 ஒளி ஆண்டுகள். அதாவது ஒளியின் வேகத்தில் (ஒரு வினாடிக்கு 3 லட்சம்
கிலோமீட்டர்கள்) போனால், தாம்பாளத்தின் அந்தப்பக்கத்தை அடைய 70,000 ஆண்டுகள்
ஆகும்! கற்பனை செய்ய முடிகிறதா?
இந்தப் பால்வீதியில் ஒரு மூலையில் உள்ள
மிளகு சூரியன். அதைச் சுற்றிவரும் ஒரு சின்ன கடுகுதான் பூமி! பால்வீதியில் உள்ள
நட்சத்திரங்களில் இரண்டு லட்சத்தில் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றம் ஒரு கிரகத்தில்
உயிர்கள் உண்டு என்று எடுத்துக்கொண்டாலும் கூட கணக்குப்படி பால்வீதியில் மட்டும்
சுமார் 10 லட்சம் மனித நாகரிகங்கள் (பூமி) இருந்தாக வேண்டும்.
பால்வீதியிலேயே இப்படி! அதுபோல கோடானுகோடி
பால்வீதிகள் அகண்ட கண்டத்தில் உண்டு. அப்படி இருந்தாலும் இரண்டு நாகரிகங்களுக்கு
இடையே உள்ள சராசரி தூரமே 300 ஒளி ஆண்டுகள் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஒளிவேகத்தில் பயணிப்பவை ரேடியோ அலைகள்
மட்டுமே! அதன் மூலம் ஒரு கேள்வியை அனுப்பினால் வேற்று கிரகவாசியின் பதல் நமக்கு
வந்து சேர, மொத்தம் 700 ஆண்டுகள் பிடிக்கும். இந்த அழகில் என்னத்தை அவர்களோடு
தொடர்புகொள்வது?
1974-ம் ஆண்டிலேயே இப்படிக் கேள்விகள்
அனுப்ப ஆரம்பித்துவிட்டோம். ‘எஸ்’ என்று வேற்றுக் கிரகத்திலிருந்து பதில் சொன்னாலும் அது நமக்கு
கி.பி.2674-ம் ஆண்டுதான் வந்து சேரும்!
பிரபஞ்சத்தின் பிரமாண்டத்திற்கு முன் நாம்
வெறும் தூசுதானே. ஹூம்... ம்... நாமெல்லாம் ரொம்பத்தான் அலட்டிக்கிறோமில்ல?!
10 கருத்துகள்:
அருமையான தகவல்கள் நண்பரே.
சரியாச்சொன்னீங்க. அப்புறம் உங்க பிளாக்கில பேக்ரவுண்ட்ல இருக்குற கிளாஸ்ல டார்க் கலர்ல ஏதோ இருக்குதே, அது என்ன, என்ன பிராண்டு, எங்க கிடைக்கும், என்ன வெலை, இந்த டீடெய்ல்ஸ் கெடச்சா சௌகரியமாயிருக்கும். உதவி செய்வீர்களா?
முடிவில் நல்ல கேள்வி...?!!
தகவலுக்கு நன்றி...
tm1
நன்றி மகேந்திரன் அவர்களே!
வருக பழனி கந்தசாமி அவர்களே! நம்ம ஊர் 'டாஸ்மார்க்' ல இல்லாத சரக்கா?
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே!
கலக்கல்.
tm3
வருகைக்கு நன்றி செம்மலை ஆகாஷ் அவர்களே!
அருமையான அறிவியல் தகவல்!
வருகைக்கு நன்றி ஞானசேகரன் அவர்களே!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!