கொஞ்சம் சுவாரஸ்யமான கேள்வி பதில் இது. பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பு பாக்யா வாரஇதழில் படிச்சதா ஞாபகம். அரசியல்வாதிகள் தங்கள் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நில ஆக்ரமிப்பு சர்வசாதாரணம். இது சம்மந்தமான செய்திகள் வரும்போதெல்லாம் எனக்கு இந்த கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது!
பூமியும் பெண்ணும் சிரித்தால் மர்மச்சிரிப்புகள்னு எமன் தன் தூதர்கள்கிட்ட சொல்லி விளக்கமும் தந்தாரு.
மங்கை தன் கணவன் அல்லாத ஒருவனுடன் கூடிஒரு குழந்தை பெற நேர்ந்தால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கணவன் மடியிலேயே கிடத்தி மகிழ்வாள். அப்போது அவன் குழந்தையைப் பார்த்து கொஞ்சும்போது, அவள் தன் மனசுக்குள் தனக்கு சொந்தமில்லாத குழந்தையை தன்னுடையதுன்னு கொஞ்சுகிறானேன்னு மர்மச்சிரிப்பு சிரிப்பாளாம். அதுபோல....
நிலபுலன்களையெல்லாம் வாங்கிக்கொண்டு இதெல்லாம் என்னுடையது யாருக்கும் கொடுக்கமாட்டேன்னு சொல்லும்போது, பூமாதேவி அட முட்டாளே நிலமாகிய நான் இயற்கையின் அம்சம். யாருக்கும் சொந்தமல்ல. நீ என்மேல் முட்டாள்தனமாய் உரிமை கொண்டாடுகிறாய். நான் என்றும் நிவந்தம். நீ என்னுள் அடங்கப்போகிறவன், என்று மர்மச்சிரிப்பு சிரிப்பாளாம்!.
இது எப்படி இருக்கு?
சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட தருமபுரி கலவரத்தைப்பற்றிய உண்மையான நிலையை ஒரு பதிவில் படிக்க நேர்ந்தது. பத்திரிகைகள் மட்டும் ஊடகங்கள் எதை எப்படி வேண்டுமானாலும் திரிக்கமுடியும் மறைக்க முடியும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இந்த தருமபுரி நிகழ்வு. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது!
இணைப்பு; உண்மை என்ன? கலவரபுரியிலிருந்து..........
இது சம்மந்தமான மற்றுமொரு பதிவு தேவியர் இல்லம் திருப்பூர் ஜோதிஜியின்
தரும்புரி - வன்முறையும் வன்மமும்
8 கருத்துகள்:
ஐயோ ரொம்பப் புதிய விளக்கம்...
பகிர்வுக்கு நன்றி
வருகைக்கு நன்றி சிட்டுக்குருவியின் ஆத்மா???!
இது எப்படி இருக்கு?
பிரமாதம்..
வருகைக்கு நன்றி மதுமதி அவர்களே!
அருமை நண்பரே - பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டமைக்கு...
நன்றி...
tm4
தொடர் வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் அவர்களே!
மிகசரியான விளக்கம் பாராட்டுகள்
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி மாலதி அவர்களே!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!