புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதில் நம்மவர்களுக்கு ஆர்வம் அதிகம் என்பது அறிந்ததே. அதுவும் சற்று கலை நயத்தோடு எடுக்கத்தெரிந்துவிட்டால் அதற்கான மவுசு சொல்லி மாளாது.
பழைய புகைப்படங்கள், அபூர்வமான நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், தலைவர்களின் புகைப்படங்கள் என எல்லாமே ஒரு வகையில் பொக்கிஷம்தான். எனக்கு கிடைத்த சில அபூர்வ புகைப்படங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
1. இது மைக்ரோசாஃப்ட் அலுவலர்களின் புகைப்படம் எடுத்த ஆண்டு 1978. இடது பக்கம் கீழே இருப்பது சாட்சாத் பில்கேட்ஸ்தான்!
2. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்தர தேவி சிலை! சிலை நிறுவும் பணிகள் நடைபெற்றபோது! 1884 - ல்!
3. உலகப் போரின் போது லண்டன் மாநகர் வானில் போர் மேகம் சூழ இங்கிலாந்து விமானங்களும் ஜெர்மன் விமானங்களும் உலவும் பதற்றமான சூழ்நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்!
4. ஜப்பானின் நாகசாகி நகரம்! அணுகுண்டு வீச்சுக்கு இலக்கான பின் இருபது நிமிடங்கள் கழித்து எடுக்கப்பட்ட புகைப்படம்! 1945 - ல்!
5. லியோ டால்ஸ்டாய்! தன் பேரக் குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்!
6. கடற்கரையோரத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் நீச்சலுடையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்!
7. புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஒரு மாலை வேளை இளைப்பாறலில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
8. ஐன்ஸ்டினின் டிப்ளமோ படிப்பின் சான்றிதழ்!
9. கீழே இருப்பவர் யார் என்று தெரிகிறதா? மாவீரன் சேகுவாரா!
10. பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ நகரில்... இயேசு கிறிஸ்துவின் சிலை நிறுவப்படும் போது எடுத்த புகைப்படம்!
11. யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா? மார்டின் லூதர் கிங்!
12. சேகுவாராவின் மற்றுமொரு அரிதான புகைப்படம்!
அன்புடன்,
கவிப்ரியன்.