ஈடு செய்ய முடியாத இழப்பு; யார் மரணமடைந்தாலும் கூறப்படுகிற மரபு அஞ்சலி.
ஈழப் போராளிகள்; கலைஞரின் பாச உணர்வைச் சோதிப்பவர்கள்.
உச்சகட்டம்;
தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தருவாயில் தாறுமாறாகப் பேசுகிற நேரம்.
உடந்தை; அமைச்சர்களோடு அதிகாரிகள் இணைந்து செயல்படுகிற முறை.
உடன்பாடு; ஒரு கட்சியின் ஊழல்களை இன்னொரு கட்சி கண்டு கொள்ளாமல் இருக்க செய்யப்படுகிற ஏற்பாடு.
உடன்பிறப்பு; எதைச்சொன்னாலும் நம்பும் கட்சித் தொண்டர்.
உடன் பிறவா சகோதரி; கட்சிக்கு சமாதி கட்ட உதவி செய்பவர்.
உட்கட்சி விவகாரம்; விரைவில் பொது விவகாரமாவது.
உட்கட்சி ஜனநாயகம்; உட்கட்சித் தகராறுக்கு கட்சித் தலைவர் வைக்கும் பெயர்.
உணர்வு பூர்வமாக; அறிவுக்கு இடம் கொடுக்காமல்…
உண்ணாவிரதம்;
இரண்டு வேளை சாப்பாட்டுக்கு இடைப்பட்ட காலம் அல்லது இரண்டு வேளை சாப்பாட்டை தியாகம்
செய்து கிடைக்கும் பிரியாணிக்காக காத்திருப்பது.
உதவியாளர்; அமைச்சருக்கு தவறானவற்றைச் சொல்லிக் கொடுத்து, பின் அவரோடு சேர்ந்து கைதாகிறவர்.
உதறிவிட்டுச் செல்லத் தயார்; பதவியைத் துண்டு போலக் கருதுவதாகக் கூறி விட்டு துண்டை மட்டும்
உதறி தோளில் போட்டுக் கொள்ளும் போது தலைவர் கோபத்துடன் கூறுவது.
உயரிய நெறி; அந்தக்கால அரசியல்வாதிகள் கடை பிடித்ததாகக் கூறப்படுவது.
உயர் அதிரகாரிகள்; நிகழ்காலத்தில் அமைச்சருக்குக் கட்டுப்படுவதா, எதிர்காலத்தில்
சம்மனுக்குக் கட்டுப்படுவதா என்ற ஊசலாட்டத்தில் இருப்பவர்கள்.
உயர் நீதிமன்றம்; ஆளும் அரசுக்கு கண்டனங்கள் தெரிவிக்கும் அமைப்பு, வழக்குகள்
தேங்கியிருக்கும் இடம்.
உயர்ந்த நோக்கம்; அரசியலுக்கு தொடர்பில்லாதது.
உரிமைக்கு குரல் கொடுத்தல்; எதிர்க்கட்சியாக இருக்கும் போது தீவிரமாக கடை பிடிக்கப்படும்
கொள்கை.
உரிமை மீறல்; சட்டசபையில் ஆளும் கட்சியினர் நடந்து கொள்ளும் முறையை விமர்சனம்
செய்தல்.
உரிய மரியாதை; தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கொடுக்கப்படுவது.
உருப்படியான திட்டங்கள்; உடனடியாக ஓட்டுக்களைப் பெற்றுத் தர முடியாத திட்டங்கள்.
உருவ பொம்மை; எதற்காவது தீ வைத்து கொளுத்தினால்தான் வெறி அடங்கும் என்கிற
நிலையில் அரசியல்வாதிகள் கொளுத்துவது.
உரை நிகழ்த்துதல்; வாய்க்கு வந்தபடி பேசுதல் அல்லது யாராவது எழுதிக்கொடுத்ததைப்
படிப்பது.
உலகத்தமிழ் மாநடு; முதல்வரின் புகழைப் பரப்புவதற்காக நடத்தப்படுவது.
உலக
வங்கி; 90 சதவிகித ஊழலுக்கும் 10 சதவிகித திட்டத்திற்கும் கடன் கொடுக்கும் நிறுவனம்.
உளவுத் துறை; முதல்வர் மனதுக்குப் பிடித்த தகவல்களைக் கண்டுபிடித்து அவற்றை
அவரிடம் தெரிவிக்கும் துறை.
உளறுதல்; ஊழல் விவகாரம் வெளியே வரும் போது அரசியல் தலைவர்கள் பேட்டியளிக்கும் முறை.
உள்நோக்கம்; கெட்ட நோக்கம்.
உள்ளாட்சித்தேர்தல்; மக்களுக்குக் கிடைக்கும் இடைக்கால மரியாதை.
உறவு; லாப நோக்கில் உருவாக்கப்படுவது.
உறவுக்குக் கை கொடுத்தல்; ஆட்சிக்கு ஆபத்து வராமல் இருக்க கடைபிடிக்கப்படும் ராஜ தந்திரம்.
உறுதி மொழி; சொல்லி முடிக்கப்படும் வரை மீறப் படாதது.
உற்பத்திப்
பெருக்கம்; மக்கள் தொகை விஷயத்தில் மட்டும் வெற்றியடையும் திட்டம்.
உற்றார் உறவினர்; பெயரைக் கெடுக்கும் உரிமை பெற்றவர்கள்.
ஒரு
பழைய துக்ளக்கில் சத்யா.
2 கருத்துகள்:
அன்பின் கவிப்ரியன்
உறுதி மொழி மற்றும் உற்றார் உறவினர்கள் - இரண்டுமே அருமை - மிக மிக இரசித்தேன். மற்றவையும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல. அனைத்துமே பொறுமையாகப் படித்து இரசித்து உள்வாங்கி மகிழ வேண்டிய விளக்கங்கள். பாராட்டுகள்
நல்வாழ்த்துகள்
நட்புட்ன் சீனா
அன்பின் சீனா ஐயா! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!