Saturday, October 20, 2012

தமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள்

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம் இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடி வாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.

கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை. தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன?

முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல் எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால், அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாக &தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.

தமிழன் அறிவாளி. ஆனால், புத்திசாலி அல்ல. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைகள்).


பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல்கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.

மிருகங்களில் நாய்... பாலில் பெண்பால்... இனத்தில் தமிழன்... இந்த மூன்றுக்கும் ஒரு வினோத ஒற்றுமை உண்டு. தம்மவர்கள் முன்னேறினால் பொறுக்காது. ஒரு நாய் அதிகம் குரைப்பதே தெருவில் இன்னொரு நாய் வரும்போதுதான். அது போல சக பெண்ணின் முன்னேற்றம் இன்னொரு பெண்ணைத்தான் மனம் சுருங்கச் செய்யும். இது உண்மை.  

அதைப்போலவே ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்ற இனத்தவர் பயன்படுத்திக் கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது.

தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ பிழைக்க வந்தால், தான் காலூன்றியவுடன், தன் மண்ணில் இருந்து பிழைக்க வருபவனைத் தேடிப்பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்கள். திட்டமிட்டு அழைத்துக்கொண்டும் வருகிறார்கள். இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் மலையாள வீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டு. அதுபோல கடை உரிமையாளர்களும் உண்டு. குறைந்தது அவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும். தமிழனுக்கு அதிக வாடகை. நடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!

பெண்ணாசை: பெண்ணாசைக்கு தமிழினம் , மங்கோலிய இனம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது என்றாலும் கூட , தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம் அதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள் , பின்னால் வந்த குறு நில மன்னர்கள் , என்று பெண்ணாலும் அழகிய பெண்களை முன் நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால் அழிந்தவர்கள் என்று வரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக நிறுவனங்களை உருவாக்கி அதை பிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப் பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் . காலகாலமாக இதை மற்றவர்கள் பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.

மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும், தங்கள் மொழி, இன உணர்வைக் காக்க, சாதி மத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளி வைப்பார்கள். உதாரணமாக கிறித்தவரான கே.ஜே.யேசுதாஸின் குரல், தினசரிஅரிவராசனம்பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்க வைக்கும். அது மலையாளிகளின் ஒற்றுமை. ஆனால், தமிழனோ மத, சாதி உணர்வுகளுக்காக, தமிழ் உணர்வையும், தமிழின உணர்வையும் தரையில் போட்டு மிதிப்பான்.

இலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும்தான். ஆனால், தமிழர்களில் பெரும்பான்மையான இந்துக்கள், புத்தமதச் சிங்களன்தான் நமக்கு நெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ் முஸ்லிம்களை எதிர்த்தனர். அங்கே மொழியை விட மதம் பெரிதாகப் போனது. வடக்கு மாகாணத் தமிழன், கிழக்கு மாகாணத் தமிழனைமட்டக்களப்பான் மடையன்என்று சொல்லி தாழ்ந்த ஜாதி என்று காரணம் காட்டித் தள்ளி வைத்தான். புறக்கணித்தான். அங்கே மொழியை விட சாதி பெரிதாகப் போனது. தமிழகத்தில் இருந்து இலங்கை போன மலையகத் தமிழர்களை, சிங்கள அரசு ஒடுக்கியபோது, ஈழத் தமிழன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அங்கும் இன உணர்வில்லை.

தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். ஒரு வங்காளி எங்கு போனாலும் வங்காளியாகவே இருப்பான். ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசார வேர்களைக் கைவிடுவது இல்லை. ஆனால், தமிழன் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பொதுவாக உலக மக்களிடம் உள்ள இன உணர்வு தமிழனிடம் இல்லாததால் மரியாதை கிடைப்பது இல்லை. ஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.

இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால்..? ஆங்கிலத்தில் பேசுவார்கள் நீங்கள் அறிந்த விஷயம் இது. ஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை. அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறது.

தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக உள்ள பல பகுதிகள், தமிழின வரலாற்றின் களமாக இருந்த பல நிலங்கள், தமிழின கலாசாரமாக சின்னமாக இருந்த நிலங்கள், நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல வளமான பகுதிகள், நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம், மற்ற மாநிலத்தவரால் திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன.

அப்போது திராவிட நாடு என்ற கனவில் இருந்த தி.மு..,அதையெல்லாம் எதிர்த்தால் அந்த மாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்று எண்ணி, தமிழ்ப் பெருமாநிலம் சிதறிப்போனதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. திராவிட நாடு என்ற சித்தாந்தம் காரணமாக பெரியாரும் இதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர். விரட்டப்பட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடோ திராவிடம் என்ற பெயரில் எல்லோரையும் தொடர்ந்து அனுமதித்தது.

இங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர், அதன் பின்னர் தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டே, தங்கள் மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர். தமிழனை சுரண்டினர். தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மீட்டிங் பார்ப்பதில் குறியாக இருந்தான்.

இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த நேரம்... காங்கிரஸ் கட்சி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகப் பிரதீபா பாட்டீலை நிறுத்துகிறது. அவர் மராட்டியப் பெண்மணி. மராட்டியத்தில் காங்கிரஸும், சிவசேனாவும் எதிர்க்கட்சிகள். ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்னார், ‘‘பிரதீபா பாட்டில் எங்கள் ஜென்ம விரோதக் கட்சியான காங்கிரஸ் ஆளாக இருக்கலாம். ஆனால் எங்கள் மண்ணின் மகள். மராட்டிய மாணிக்கம். எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டு, கூட்டணி, எதிரணி என்று பாராமல் பிரதீபா பாட்டீலை ஆதரிக்கிறேன்’’என்று சொன்னார்.

ஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கிய பிரதீபா பாட்டீலை, அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன் முதலாகக் கொண்டு வந்து அறிமுகக் கூட்டம் நடத்தி, பிரதீபா பாட்டீலுக்கு பலம் சேர்த்து, ஒரு ஜனாதிபதித் தமிழன் வீழக் காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.

ஆந்திராவோ, கர்நாடகாவோ, கேரளாவோ அந்த மொழி இனம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காக, ஒரு போராட்டம் நடந்தால், அரசாங்கம், அரசியல் தலைவர்ஆள்வோர் அதை அடக்கச் சொன்னாலும் அதிகார வர்க்கமும், காவல்துறையும் போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும். அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்னவோ, நம் இன மொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வு அங்கு பலருக்கும் இருக்கும்.

அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல் செய்த தமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்தது என்பதையும் பார்த்தோம். ஆனால் தமிழ்நாட்டில்?... நமது மீனவர்களை சிங்களக் கடற்படை என்ன செய்தாலும் கவலை இல்லை. ஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டு, சுடுநீரில் குளிப்பாட்டி,சொறிந்து விட்டு, சொடக்கெடுத்து, தலைவாழை இழைபோட்டு, உணவு ஊட்டி, பீடா மடித்துக்கொடுக்கும் தமிழக போலீஸ்...

தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காக, தமிழனுக்காக போராடினால் மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக் காவல்துறை. காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில் மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும், அது கட்சி அரசியலோடு நின்றுவிடும். கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள்.

ஆனால், தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள் கொசுக்கள் போல நசுக்கப்பட்டபோதும்... அது பற்றிக் கவலைப்படாமல், ஒரு நாளைக்கு கூட உருப்படியாகப் பலன் தராத ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்த தமிழக வாக்காளர்கள்...

தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்.... பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்.

காவிரி நீர் பிரச்னை குறித்து  தினமலர் நாளிதழில் வந்த ஒரு கட்டுரைக்கு திருநெல்வேலியிலிருந்து நாகராஜன் என்பவர் எழுதிய கடிதம் இது. தமிழர்களாகிய நாம் அனைவரும் படித்து சிந்திக்கவேண்டிய கருத்துக்களாக இருப்பதால் இதை என் வலைத்தளத்தில் பதிவேற்றியிருக்கிறேன்.

அன்புடன்,

25 comments:

Anonymous said... [Reply]

தமிழனைப் பற்றி தமிழனின் ஒரு தெளிவான பார்வை. ஒற்றுமை இது ஒன்றிருந்தால் இன்று தமிழன் தரணியாண்டு கொண்டிருப்பான். குதிரைக்கு கொம்பு கொடுக்காதது ஏன்? என்பதை எம் முன்னோர்கள் சொல்வார்கள். அது போலத்தான் தமிழனுக்கு ஒற்றுமையயும். இத்தனை அழிவிற்குப் பின்னராவது உணர்ந்து ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு. அல்லது உலகில் அழிந்த இனத்தில் அழிந்த மொழிகளில் தமிழ் இனமும் மொழியும் என்பது விரைவில் பதியப்படும்.

Jayadev Das said... [Reply]

முல்லை பெரியார் போராட்டத்துல தமிழ் காரனை அடிச்சி விரட்டிகிட்டு இருக்காங்க, அவனவனும் பிள்ளை குட்டியோட கல்லிலும் முள்ளிலும் நடந்து உசிருக்கு போராடி ஓடிவந்துகிட்டு இருக்கான், பஸ் , லாரி வேன் எதுவும் கேரளாவுக்குப் போகலே, ஆனா திருட்டு மணல் லாரி மட்டும் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கு போகுதுப்பா............ இந்த மாதிரி காட்டி கொடுக்கும் கம்னாட்டிங்க தமிழ் நாட்டில நெறையவே இருக்கானுவ, இவனுங்க உருப்பட மாட்டானுங்க.

Anonymous said... [Reply]

தினமலரில வந்ததால் இந்த உண்மைகளை மறத்தமிழர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் நன்றி அனானி!எனக்கென்னவோ தமிழர்களிடம் ஒற்றுமையுணர்வு வரவே வராது என்றுதான் தோன்றுகிறது!

கவிப்ரியன் said... [Reply]

உங்கள் ஆதங்கம் புரிகிறது ஜெயதேவ் தாஸ் அவர்களே! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

Arif .A said... [Reply]

இதை படிக்கும் போது ஆத்திரமும் கோபமும் வருகிரது.யாரிடம் காட்டுவது.?எனது சந்ததினரை வளர்க்கும் போது கூடவே தமிழின் ஒற்றுமையை நிச்சியம் போதிப்பேன்.வேர என்ன செய்ய முடியும்.

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கு நன்றி ஆரிஃப் அவர்களே! உண்மைதான். இயலாமைதான் மிஞ்சுகிறது.

S said... [Reply]

மிக முக்கியமான காரணம் ஒன்று விடுபட்டுவிட்டது என்று நினைக்கிறேன். அரை நூற்றாண்டுகளாக தங்கள் தலைவர்களை சினிமாத் துறையிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பது.

கவிப்ரியன் said... [Reply]

ஆம்! வெட்கக் கேடான விஷயம்தான் நண்பரே! அந்த மாயை விஜயகாந்த் போன்றோர் தலையெடுப்பது வரை நீடித்துக்கொண்டிருக்கிறது.

Semmalai Akash! said... [Reply]

அருமையான அலசல்! எங்கும் எதிலும் இப்படிதான் தமிழர்கள் என்ற நிலைதான் இப்போது உலக வரலாற்றில் தமிழர்களின் ஒற்றுமை எங்கே போனது???

கவிப்ரியன் said... [Reply]

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி செம்மலை ஆகாஷ் அவர்களே!

இராஜராஜேஸ்வரி said... [Reply]

ஆதங்கமான அலசல் ...

மாலதி said... [Reply]

தங்களை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் அருள் கூர்ந்து நேரம் கிடைக்கையில் சென்று வாசிக்கவும் நன்றிகளுடன் மாலதி

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே!

கவிப்ரியன் said... [Reply]

மாலதி அவர்களே தங்களின் வருகைக்கு முதல் நன்றி!

எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு இரண்டாவது நன்றி!

Anonymous said... [Reply]

அறிவும் இல்லை ஆற்றலும் இல்லை. இருந்தால் என்றோ பிழைத்திருக்கும். கூழை கும்பிடு போட்டு பிழைக்கும் இனம் நமது. தொடர்ந்து அடி வாங்கி அதில் பெருமை அடைவது நம் இனம். யார் பிழைத்தாலும் பிழைக்கட்டும் சக தமிழன் மட்டும் பிழைத்து விட கூடாது என்ற எண்ணம் தான் இந்த இழி நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

கவிப்ரியன் said... [Reply]

கூழைக் கும்பிடு போடுபவர்கள் இருப்பது உண்மைதான். அதற்காக எல்லோருமே அப்படி என்று சொல்லிவிட முடியாது அனானி!

இந்த ஜால்ராக்கள் சிலருக்கு உள்ள குணம்தான், யார் பிழைத்தாலும் பரவாயில்லை. தன் இனமோ, உறவோ பிழைத்துவிடக்கூடாது என்கிற வயிற்றெரிச்சல்!

Vijay Periasamy said... [Reply]

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

கவிப்ரியன் said... [Reply]

ஒற்றுமையில்லாத இந்த மக்களைப் பார்த்துதான் பாரதி அப்படிப் பாடினான். அந்தக் கனவு இன்னும் நனவாகவில்லை. இனியும் ஆகுமா என்ற நம்பிக்கையும் இல்லை!

வருகைக்கு நன்றி விஜய் பெரியசாமி அவர்களே!

Robert said... [Reply]

தெளிவானதொரு அலசல். அனைத்தும் நிதர்சனமான சுடுகின்ற உண்மைதான். இந்த நிலை கண்டிப்பாக மாறும், மாற்றுவோம் என்ற நம்பிக்கையோடு முயற்சிப்போம் நண்பரே....

புரட்சித் தமிழன் said... [Reply]

தன் குடும்பங்களை மட்டுமே வாழ வைக்க, தமிழர்கள் அனைவரும் எக்கேடுகெட்டால் என்ன என்று மத்திய அரசில் அமைச்சர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை. மற்றும் அது மாதிரியான நபர்களை நம்மக்கள் தேர்வு செய்து அனுப்பும் வரை இந்த தமிழினம் உருப்படாது. கசாப் தூக்கில் இடப்பட்ட போது தமிழ் நாட்டில் இருந்து சில குறல்கள் அவசர அவசரமாக ஏன் தூக்கிலிடுகிறார்கள் என்று. லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும்போது, இவனுங்க ராஜீவ்காந்தியை கொன்னூட்டானுங்க அதனால அந்த ஒரு உயிருக்கு ஒரு லட்சம் தமிழன் உயிரும் ஈடாகாது என்று தமிழக காங்கிரசினர் செயல்படுகிறார்கள்.

Kavi Priyan said... [Reply]

ஆம் ராபர்ட் அவர்களே! நாம் ஒவ்வொருவரும் முயற்சியில் இறங்கினால் மாற்றம் நிச்சயம் வரும். நம்பிக்கைதானே வாழ்க்கை!

Kavi Priyan said... [Reply]

உண்மைதான் புரட்சித்தமிழன். மற்ற மாநில அமைச்சர்கள் தத்தமது மண்ணுக்கு உண்மையாக இருக்க நமது மாநில அமைச்சர்களோ தேசிய தோல் போர்த்திக்கொண்டு சுருட்டுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

Anonymous said... [Reply]

தமிழனம் அழிவதற்கு தமிழனே காரணம். ஒற்றுமையின்மையே இன்றைய அழிவுகள் அனைத்திற்கும் காரணம். இது தமிழருக்கு ஏற்பட்ட சாபக் கேடா? இத்தனை அழிவுகளுக்குப் பின்னாவது இனியாவது உணருவார்களா?

Anonymous said... [Reply]

Dear Brother,

superb article, unfortunately all are running / pressurised by the commercial storm. They running behind money, heavy competition for everything, no time to think of even there own family elders & others. They see an urgency & fear in all subjects & aspects. They are becoming very much selfish what to do? How can they think about society bro...?

I am first time commenting your blog. Unable to type in tamil..sorry for that and kindly excuse...

S.Ravi,
callmesrk@gmail.com

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!