அனைவருக்கும் சுதந்தரதின நல்வாழ்த்துக்கள்!
சென்ற ஆண்டு இதே நாளில்தான் நான் இந்த வலைப்பதிவை எழுத்தொடங்கினேன். ஒரு வருடம் நிறைவடைந்திருக்கிறது. கிட்டத்தட்ட108 இடுகைகளுடன் 25,000 பக்கப் பார்வைகளோடு தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இடையிடையே நேரமில்லாத காரணத்தால் சிறிது இடைவெளி ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து வலைப்பதிவை எழுதும் எண்ணத்தில்தான் இருக்கிறேன். கடிதங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் என்றாலும் நாட்டு நடப்புகளையும் அலச எண்ணமிருந்தது. ஆனால் நேரமின்மையால் காலம் கடந்து பழைய செய்தியாகிவிடுகிறபோது எழுத உற்சாகம் இல்லாமற் போகிறது.
ஆரம்ப காலத்தில் உற்சாகம் கொடுத்த நண்பர்கள் இப்போது இல்லை என்றாலும் பல புதிய நட்புகளும் அறிமுகமாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். என்ற போதிலும் பல பதிவர்களைப்போல தொடர்ந்து இடுகைகளை எழுதமுடியாமலும், மற்ற பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இடமுடியாமல் போகும்போதும் மனம் வருந்தவே செய்கிறது. ஆனாலும் என் இருப்பைக் காட்டிக் கொள்ள பதிவுலகத்தை ஒரு கருவியாகவே பாவிக்கறேன் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
சுதந்தரதினம் எப்போதும் போலவே ஒரு சம்பிரதாயமாக நடந்தேறிவிட்டது. தேசிய உணர்வுகள் மங்கிப்போய்விட்ட இந்த நாளில் இது ஒரு ஞாபகமூட்டும் தினம் அவ்வளவே! எப்போது மாறும் நம் மனோநிலை? ஏக்கமாகவும் இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது.
அன்புடன்,
7 கருத்துகள்:
நண்பர்களே, எங்கள் பக்கத்திர்க்கும் ஆதர்வு தெரிவியுங்கள்... நன்றி
Tamizh Vaazh
Facebook Page
Nanba thangal thalam innum pallaandu needithu nirakkatum thamizh ulla varai....
Tamizh Vaazh
மீண்டும் தங்களிடம் அதிகப் பதிவுகளை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
இந்தப் பதிவு நல்ல துவக்கமாக இருக்கட்டும்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அட்மின்! என்னுடைய ஆதரவும் கண்டிப்பாக தங்களுக்கு உண்டு!
தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும், ஆர்வத்திற்கும் மனமார்ந்த நன்றி ரமணி அவர்களே!
தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி மாதேவி அவர்களே!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!