புதன், 14 மார்ச், 2012

என்னைத் தெரியுமா?


இந்த 32 கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ஒரு பதிவை சில வலைப்பக்கங்களில் பார்க்க நேர்ந்தது. எனக்கும் ஒரு ஆசை நாமும் அதே மாதிரி பதிவிட்டால் என்ன என்று! அதன் விளைவுதான் இது.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?
இந்தப் பெயர் (கவிப்ரியன்) பதிவுலகத்திற்காக நானாக வைத்துக்கொண்டது.  கவிதைகள் எனக்குப் பிடிக்கும். கவிக்குப் ப்ரியன், கவிப்ரியன். நிஜப்பெயர்; சொல்ல ஆசைதான். ஆனால் யாரும் கேட்கவில்லையே!

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
நினைவில்லை. ஆனால் சில சந்தர்ப்பங்களில் வேதனை மிகுதியால் அழுதிருக்கிறேன். அப்புறம் 'மாகாநதி' படம் பார்த்து அழுதிருக்கிறேன். 'அழகி'யைப் பார்த்து அழுதிருக்கிறேன். ஏனோ இறந்து போனவர்களைப் பார்த்தால் அழுகை வருவதில்லை.

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
சின்ன வயசிலிருந்தே கையெழுத்திற்காக நிறைய பேரிடம் பாராட்டுகள் வாங்கியிருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போதோ பரிசுகள் பல. பிற்காலத்தில் கையெழுத்திற்காகவே பல பேனா நண்பர்கள் அமைந்ததும் உண்டு. எனக்கும் என் கையெழுத்தின் மீது எப்போதுமே ஒரு கர்வம் உண்டு. ஆனால் கையெழுத்து நன்றாக இருப்பவர்களுக்கு தலையெழுத்து நன்றாக இருக்காதாம். என் நிலைமையும் அப்படித்தான்!

4.
பிடித்த மதிய உணவு என்ன?
என் மனைவி வைக்கும் விரால் மீன்குழம்பும் சாதமும்.

5.
நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்பு கொண்டாடக் கூடியவரா?
நிச்சயம். ஆனல் எனக்குள் எச்சரிக்கை உணர்வுகள இருந்து கொண்டே இருக்கும். நெருக்கமான நட்பிற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும்.

6.
கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடலில் கால் மட்டும்தான் நனைத்திருக்கிறேன். குளிக்கப் பிடிக்காது. ஆனால் ஒரே ஒருமுறை அரேபிய வளைகுடாப் பகுதியில் ஆழமில்லாத, அலை ஆரவாரமில்லாத, தெளிந்த கடல் பகுதியில், மிகவும் ரம்மியமான ஒரு மாலைப் பொழுதில் மணிக்கணக்கில் குளித்திருக்கிறேன். ஆனால் ஒருவகை ஜெல்லிபிஷ் மிதப்பதைப் பார்த்து ஆசையாய் கையிலெடுத்துப்பார்க்க உடம்பெல்லாம் அரிப்பெடுக்கத்துவங்கி அலர்ஜியாகிவிட்டது.
அருவிக் குளியலில் குற்றாலத்திலும், ஒகனேக்கல்லிலும் அனுபவித்துக் குளித்திருக்கிறேன்.

7.
முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?
கண்கள்.

8.
உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?
பிடித்தது – உதவி என்று கேட்டால் மறுக்காமல் (ஆளை எடைபோடத் தெரியமல்) செய்வது. எல்லோரிடமும் முடிந்தவரை அன்பாக பழகுவது.
 
பிடிக்காதது – அதிகம் கோபப்படுவது. (நமக்கு வேண்டியவர்களிடம் மட்டும் வீரத்தைக் காண்பிப்பது!)

9.
உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?

பிடித்தது – புத்தகப் படிப்பும், கடின உழைப்பும்
பிடிக்காதது – முன்கோபமும், பகலில் தூங்குவதும்.


10.
யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?
எப்போதும் மனைவி மக்களோடு இருக்க முடியாததற்கு வருந்துகிறேன்


11.
இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
அலுவலகச் சீருடையில்...


12.
என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
என் அறையில் ஒடும் மின்விசிறியின் சத்தத்தை மட்டும்

13.
வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?
வெளிர் நீலம்

14.
பிடித்த மணம்?
ஜாதி பிடிக்காத எனக்கு ஜாதிமல்லிகைதான் பிடிக்கும்


15.
நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?
ஹூம் யாரை அழைப்பது? ஒருத்தரை அழைத்தால் இன்னொருவர் கோபித்துக்கொள்வார். அதுவும் இல்லாமல் நான் இருப்பதோ வெளியூரில். அதனால் பிடித்தாலும் யாரையும் அழைக்கும் உத்தேசமில்லை.

16.
உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவுகள்
நமக்கு யாருங்க இதை அனுப்பப்போறாங்க? ச்சும்மா எனக்கும் ஒரு ஆசை! அதான். பிடித்த பதிவு நிறைய இருக்கு. தினம் ஒரு பதிவை இனி என் பதில் குறிப்பிட எண்ணியிருக்கிறேன்.


17. பிடித்த விளையாட்டு?
விளையாட்டே பிடிக்காதுங்கஎப்போதாவது குறுக்கெழுத்துப் போட்டி! சின்ன வயசுல தினமலர்-வாரமலர்-ல பரிசுகூட வாங்கியிருக்கேன்!

18.
கண்ணாடி அணிபவரா?
ஆம்! வருத்தத்துடன் சிறிது காலமாக .


19.
எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மனதை அதிகம் சிரமப்படுத்தாத வன்முறையில்லாத படங்கள் ....
மிகவும் பிடித்த படம் "எங்க வீட்டுப் பிள்ளையும் அன்பே வா - வும் "


20.
கடைசியாகப் பார்த்த படம்?
எங்கேயும் எப்போதும்!

21.
பிடித்த பருவகாலம் எது?
மழைக்காலம்


22.
இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
இலங்கை எழுத்தாளர் தமிழ்ந்தியின் கானல்வரி.


23.
உங்கள் டெக்ஸ்-டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?
அந்த நினைப்பே இருப்பதில்லை!


24.
உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் - நிசப்தம்
பிடிக்காத சத்தம்- பேச்சு சத்தமும், பாட்டு சத்தமும்.


25.
வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?
ஆப்பிரிக்க நாடான சூடான். மனம் என்னமோ வீட்டைத்தான் சுற்றி வந்துகொண்டிருந்தது


26.
உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
கொஞ்சம் எழுத்து ,கொஞ்சம் பேச்சு!


27.
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?
நேரத்திற்கேற்ப ஒரு பொய் பேசுவது

28.
உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?
ஒரே ஒரு குட்டிச் சாத்தான்தான்! ஆனால் அவனை எப்படி காட்டிக் கொடுப்பது? என்னுள் இருப்பவனாயிற்றே!

29.
உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
உதகமண்டலம்

30.
எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?
அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

31.
மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
இணையத்தில் உலவும்போது எவர் தொந்தரவும் இல்லாதிருக்கவேண்டும்!


32.
வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.
ஒரே ஒரு முறை வாய்க்கும் இனிய அற்புதப்பயணம்!

 
--> 'மார்கழி மாதத்துப் பனித்துளிகள்' என்ற வலைப்பதிவின் ஆசிரியர் தாட்சாயணி அவர்களின் காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம் என்ற பதிவை படித்துப்பாருங்களேன், உங்களுக்கும் பிடிக்கும்.

7 கருத்துகள்:

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி அருள் அவர்களே!
உங்கள் பதிவைப் படித்தேன். மிகவும் பாராட்டத்தக்க முநற்சி! வாழ்த்துக்களும் நன்றியும்!

arasan சொன்னது… [Reply]

மொத்த பதிலையும் படித்தேன் .
இயல்பான பதில்கள் .. அறிந்து கொள்ள முடிகின்றது ...

Marc சொன்னது… [Reply]

அருமை கேள்வி பதில்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது… [Reply]

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.
ஒரே ஒரு முறை வாய்க்கும் இனிய அற்புதப்பயணம்!

nice...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி அரசன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் பகர்வுக்கும் நன்றி சேகர்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வந்து வாழ்த்தியமைக்கு நன்றி இராஜேஸ்வரி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!