இங்கிருந்து
சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சூரியன். பூமிக்கு வெளிச்சமும், சூடும் பிறந்ததிலிருந்தே வழங்கி வருகிறது. நடுப்பகலில் பூமியின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டரின் மேலும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் இரண்டு காலரிச் சக்தியை சூரியன் நமக்குத் தருகிறது.
இரண்டு
காலரிதானா என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். பூமியின் குறுக்குப் பரப்பைக் கொண்டு அதைப் பெருக்கினால் ஒவ்வொரு நிமிடமும் இருபந்தைந்தாயிரம் கோடி காலரிக்களை நாம் சூரியனிடமிருந்து பெருகிறோம்.
சூரியன்
பூமிக்கு அனுப்பும் சக்தி அற்பம். நமக்குக் கிடைப்பதைப் போல இருநூறு கோடி மடங்கு சக்தியை அது எல்லாத் திசைகளுக்கும் அனுப்புகிறது. இவ்வளவு சக்தி பெற்றும் நாம் அதை நேரிடையாக பயன்படுத்துவதில்லை. மறைமுகமாகத்தான் மாற்றுகிறோம்.
மழை
நீரும், நிலக்கரியும் சூரியனின் உபயம்தான். நேரடியாக சூரிய வெளிச்சத்தை மின்சாரமாக மாற்ற சோலார் பானல்கள் உள்ளன. இவை மிக மிக ஆற்றல் குறைவானவை. இவற்றைக் கொண்டு நாம் எடுக்கும் மின்சாரத்தின் அளவும் மிகமிகக் குறைவு.
மற்றதெல்லாம்
விண்வெளியில் பிரதிபலித்தும், பூமியினை மாற்றி மாற்றி வெப்பப்படுத்தியும் விரயமாகிக் கொண்டிருக்கின்றன.
சூரிய
ஒளியை மின்சாரமாக்கும் ஆற்றலின் எண்ணிக்கையைத் தற்போதிலிருந்து ஐம்பது சதவிகிதத்துக்கு அதிகமாக்கும் வித்தை தெரிந்தவர்கள் உங்களில் யாரேனும் இருந்தால் ஒரு புதிய நிறுவனம் தொடங்கி உலகை விலை பேசலாம்.