புதன், 6 மார்ச், 2013

போராடும் பெண்மணிகள்!

  •    உலகம் முழுவதும் முறைசாரா தொழில்களில் பணிபுரிவோரில் சுமார் 50 கோடி பேர் பெண்கள்.
  •      உலக அளவில் சுமார் 30 சதவீதம் குடும்பங்களுக்கு பெண்களுடைய வருமானம் மட்டுமே முக்கியமான வருவாயாக உள்ளது
  •    இந்தியாவில் சுமார் 6 கோடி குடும்பங்களை பெண்களே சம்பாதித்து நடத்துகின்றனர்.
  •    உலகம் முழுவதும் உள்ள 13 மில்லியன் அகதிகளில் அதிகமானோர் பெண் குழந்தைகள்.
  •   ஒரு வயதுக்குக் குறைந்த ஹிந்துப் பெண் குழந்தைகளில் திருமணமாகி விதவையானவர்கள் 612, 5 வயது விதவைச் சிறுமிகள் 2024, 10 வயது விதவைச் சிறுமிகள் 97857, 13 வயது விதவைச் சிறுமிகள் 3, 32,000. இதெல்லாம் எப்போது? 1921-ல்.
  •   உலகின் முதல் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஜெர்மன் நடிகை உர்சுலா பேட்ஸ்கி 1934-ல்.
  •   எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஜங்கோ தாபெய்-ஜப்பான். 10.05.1984 (21 வயதி
  •   அமெரிக்காவில் பெண்களுக்கு 26.08.1920 அன்றுதான் ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. (சுதந்தரம் அடைந்து 150 வருடங்களுக்குப்பின்)
  •   நோபல் பரிசு பெற்ற முதல் பெண் செல்மாலா கார்லாப் – ஸ்வீடன் (1905-ல் இலக்கியத்திற்காக)
  •      உலகின் முதல் பெண்கள் விமானப்படைப் பிரிவு 1918 ல் பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
  •   விம்பிள்டன் போட்டிகளில் பெண்களும் கால்சட்டை அணியலாம் என்று 16.05.1934 அன்று அனுமதிக்கப்பட்டது.
  •   இந்தியாவின் முதல் அழிகியாகத் தேர்ந்தெடுக்கப்படவர் ரீட்டா ஃபாரியா என்கிற மருத்துவ மாணவி. (17.12.1966)
  •   இந்தியாவின் முதல் N.C.C. கல்லூரி 1965 ல் குவாலியரில் ஆரம்பிக்கப்பட்டது.
  •   உலகத்திலேயே பெண் விமானியை வேலைக்கு எடுத்துக்கொண்ட முதல் நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ்தான். இதில் 13% பேர் பெண்கள். 18 பெண்கள் விமானிகளாக உள்ளனர்.
  •   காமா என்ற பெண் ஜெர்மனியில் இந்திய தேசிய காங்கிரசின் கூட்டத்தில் சேலைத் தலைப்பைக் கிழித்து தேசியக்கொடியாய் உயர்த்திக் காட்டினார். அதுவே பின்னர் அசோகச் சக்கரமும் வெண்மையும் சேர்ந்து தேசியக்கொடியாயிற்று.

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

நல்லதொரு தொகுப்பு...

இன்று மட்டும் அல்ல-என்றும்... வாழ்த்துக்கள்...

உஷா அன்பரசு சொன்னது… [Reply]

சாதனை பெண்களை சிறப்பித்து நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தொடர் வருகைக்கும், தாங்கள் தரும் ஊக்கத்திற்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி உஷா அவர்களே!

மாலதி சொன்னது… [Reply]

sirappana seythikal

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி மாலதி அவர்களே!

ஜோதிஜி சொன்னது… [Reply]

கடைசி செய்தி எனக்கு புதிது

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!