இதுவல்ல தோழி
நட்பு என்பது ...
முகம் கண்டவுடன்
முந்திவரும்
உதட்டோர அழைப்பு
முன்னேறினால் முகமலர்வு
பின்னேறினால் அகமகிழ்வு
உணவு பகிர்தல்
நட்புக் கயிறு கட்டுதல்
ஊர் சுற்றிப் பறத்தல்
தொலைபேசியில் நேரம் தொலைத்தல்
வாழ்த்தட்டை அனுப்பல்
இரகசியம் அலசல்
பயணச்சீட்டு முதல் பசியாறும் உணவு வரை
பணம் செலவழித்தல்
இதுவல்ல தோழி
நட்பு என்பது!
மலர வேண்டும்
அன்றலர்ந்த மொட்டாய்
அகமும் முகமும் ...
பேசவேண்டும்
எல்லைக்கோடற்ற வாழ்த்தைகள்
பல வருடப் பழக்கமல்ல
நட்பின் ஆழம் சொல்வது
சில நிமுடப் புரிதல்
காலச் சுழற்சியில்
தொலைதூர இடைவெளியில்
நம் நட்பு தொலையாதிருந்தால்
சூழல்களால் சூறையாடப்பட்டாலும்
மனவிளிம்பில் என் நினைவு
ஒட்டியிருபிரிந்து பல வருடம் கழிந்தும் என்
பிறந்தநாள் உன் நினைவிலிருந்தால்
தொலைபேசி சுழற்ற்றுகையில்
உன் மனதிற்குள்
என் வீட்டு எண் ஒலித்தால்
நரை கூடிய பின்னும் என்
கையெழுத்து உன்
கண் கண்டறிந்தால்
இவையனைத்தும்
இவையனைத்தும்
எனக்குள்ளும் உயிர்த்திருந்தால்...
நம் நட்பு
என்றும் நிலைத்திருக்கும்
எழுதப்படாத சரித்திரமாய்!
'ஜன்னலோரச் சிறகுகளிலில்' இருந்து .... கலைமதி ஆனந்த்
/// மலர வேண்டும்
பதிலளிநீக்குஅன்றலர்ந்த மொட்டாய்
அகமும் முகமும் ... ///
அருமை... வாழ்த்துக்கள்...
தமிழ்மணம் +1 இணைத்தாகி விட்டது... நன்றி...
பதிலளிநீக்குமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே, தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும்.
பதிலளிநீக்குநீங்க சொல்லும் நட்பு உண்மைதான்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!
பதிலளிநீக்கு