சனி, 17 நவம்பர், 2012

எனக்குப் பிடித்த கேள்வி-பதில்கள்-2



அனுபவம் என்பது என்ன?

ஒவ்வோருவரும் தம் தவறுகளுக்குத் தரும் பெயர்.

வாழ்க்கை என்பது ஏன் புதிராய் இருக்கிறது?
அதனால்தான் சுவாரஸ்யமாய் இருக்கிறது.

வாழ்க்கை எப்போது சுமையாகிறது?

நகைச்சுவை உணர்ச்சி போய்விடுகிறபோது!

வெற்றிக்கு தடையாக இருப்பது எது?

கவலை. அது நாளைய தோல்விகளை அழிப்பதில்லை. இன்றைய வலிமையைக் குறைத்துவிடுகிறது.


சந்தோஷம் என்பது என்ன?

சந்தோஷம் என்பது என்ன என்று ஆராய்ந்து கொண்டிருந்தால் உன்னால் சந்தோஷமாக இருக்க முடியாது. வாழ்க்கையின் அர்த்தம் என்று சிந்தித்தால் வாழ முடியாது.

எதனால் அழிவு ஏற்படுகிறது?

மனிதனுக்கு பற்றுதலால் விருப்பமும், விருப்பத்தினால் சினமும், சினத்தால் மயக்கமும், மயக்கத்தால் புத்தி நாசமும், புத்தி நாசத்தால் அழிவும் ஏற்படுவதாக கீதை சவல்கிறது!

ஒரு மனிதன் வெற்றியை அடைய என்ன செய்யவேண்டும்?

வெற்றியின் நடுவிலே உள்ள ஒற்றெழுத்தை (ற்) நீக்கிவிட வேண்டும். ஆம் வெறி கொள்ள வேண்டும்.
 
என்னிடம் மது, மாது, புகைப்பழக்கம் கிடையாது! நான் நூறு வயது வரை வாழ முடியும்தானே?

பிறகெதற்கு நூறு வருட வாழ்க்கை?!

இலட்சியங்கள் காலம் செல்லச் செல்ல ஒளி மங்கிவிடுவதேன்?

பதினெட்டு வயதில் லட்சியங்கள் மலையுச்சியில் இருக்கின்றன. அவற்றை நோக்கி வெறியுடன் முன்னேறுகிறோம். ஐம்பது வயதில் அவை குகைகளாகிவிடுகின்றன. அதில் ஒளிந்துகொள்கிறோம்.

சில நேரங்களில் நல்ல நட்பில் கூட விரிசல் ஏற்பட்டுவிடுகிறதே?

நல்ல நட்பு ஆரோக்கியத்தைப் போல ஒரு பொக்கிஷம்! ஆரோக்கியம் போனபின் ஏற்படும் அவஸ்தை போல, நட்பை இழந்தபின்தான் அதன் மதிப்பு நமக்குப் புரியவரும்.

உலகத்தின் முதல் விஞ்ஞானி யார்?

குழந்தை! மூடிக்கிடந்த மனசு, மூடிக்கிடந்த பூமி இரண்டும் கேள்விகளால்தான் திறக்கப்பட்டன. உலகை வியத்தல்..., கேள்விகள் எறிதல்...., ரகசியம் அறிதல்... இம்மூன்றுமே ஒரு குழந்தைக்கும், விஞ்ஞானிக்குமான பொதுக்குணங்கள்.

விஞ்ஞானத்தை கேள்வி தொடங்கி வைக்கிறது. கேள்வியை குழந்தை தொடங்கி வைக்கிறது. எனவே உலகத்தின் முதல் விஞ்ஞானி குழந்தைதானே!

சிருஷ்டியின் ஆபத்தான படைப்பு எது?

மனம்!

தொடர்புடைய இடுகை: எனக்குப் பிடித்த கேள்வி-பதில்

12 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. எல்லாமே அசத்தல். வாழ்க்கையை புடம் போட்டுக் காட்டும் வரிகள். நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்?

    http://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. தொடர் வருகைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி அவர்களே! உங்கள் தளத்திற்கும் அவசியம் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. யோசிக்க வைத்த கேள்விகள்.. சிந்திக்க வைக்கும் பதில்கள்!

    பதிலளிநீக்கு
  5. எப்பவும் தனக்குத்தானே கேட்டுக்கொள்ளும் கேள்விகளுக்கு சரியான பதில்கள்.

    அசத்தல் நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. அழகான கேள்விகளும்
    ஆழமான பதில்களும்...

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி உஷா அன்பரசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. சரியான கேள்வியும் சுவாரஸ்யமான பதில்களும் எப்போதுமே சலிப்பதில்லை செம்மலை ஆகாஷ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மகேந்திரன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான கேள்விகளும் பதிலும்.

    பதிலளிநீக்கு
  11. வருக சசிகலா அவர்களே! நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!