தமிழ்! நாம் நமது வாழ்க்கை முழுவதும் பயன்படுத்தும் வார்த்தை. பிறந்து தவழத் தொடங்கும் போதே தாயின் தாலாட்டால் தலைக்குள் புகுத்தப்படும் ஒரு உணர்வு. பேச்சு எழுத்து என எல்லாநேரங்களிலும் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள உபயோகப்படும் ஒரு மொழி!
ஆனால் தமிழர்களாகிய நாம் பேசும்போதும் எழுதும்போதும் தவறில்லாமல் பயன்படுத்துகிறோமா? இல்லை என்பதுதான் விடையாக இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் இளைய தலைமுறை தமிழாசிரியர்களுக்கே தமிழிலக்கணம் பற்றி தெரியுமா என்பதே ஐயப்பாடு!
அன்றாட வாழ்க்கையில் புழங்கும் வார்த்தைகளில் எத்தனை தவறுகளை நம்மில் பலர் செய்கிறோம் என்பதை கொஞ்சம் கவனியுங்களேன்.
தவறு சரி
சுவற்றில் சுவரில்
ஒருக்கால் ஒருகால்
பத்திரிக்கை பத்திரிகை
வெய்யில் வெயில்
கொப்பளம் கொப்புளம்
அடமழை அடைமழை
சில்லரை சில்லறை
அவரல்ல அவரல்லர்
அருவாமனை அரிவாள் மனை
அலமேலு அலர்மேலு
எழவு இழவு
ஒண்டியாய் ஒருவனாய்
கருத்துக்கள் கருத்துகள்
சிலவு செலவு
தெய்வீகம் தெய்விகம்
தொந்திரவு தொந்தரவு
சுதந்திரம் சுதந்தரம்
தேசீயம் தேசியம்
பண்டகசாலை பண்டசாலை
நாகரீகம் நாகரிகம்
பதட்டநிலை பதற்றநிலை
உடமை உடைமை
கோர்வை கோவை
கோர்த்து கோத்து
முகர்ந்து மோந்து
சிகப்பு சிவப்பு
சம்மந்தி சம்பந்தி
சமயல் சமையல்
எடக்கு இடக்கு
அருமை அருமை..
பதிலளிநீக்குதெரிந்துகொள்ள வேண்டியவைகள்
பகிர்வுக்கு நன்றிகள் பல தோழரே..
வருகைக்கு மிக்க நன்றி மகேந்திரன் அவர்களே!
பதிலளிநீக்குஅறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு... நன்றி...
பதிலளிநீக்குவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…
தங்கள் வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வலைச்சரத்தில் சகோதரி மாலதியால் என் பதிவு அறிமுகப்படுத்தப்பட்ட செய்தியை தெரிவித்தமைக்கும் நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வலைத்தளத்திற்குள்ளும் நுழைந்து படித்துக்கொண்டிருக்கிறேன்.....