ஞாயிறு, 11 நவம்பர், 2012

பாலகுமாரன் பக்கம் -2



நான் நம்பத்தயாரில்லை. ஆண்-பெண் உறவில் பிறக்கும் ஸ்நேகத்தைப் பற்றிய பரிசீலனையில் இருப்பவன் நான். ஸ்நேகிதம் என்ற ஒன்றை நம்பி தோற்றுப் போனவன். அதனாலேயே சந்தேகிப்பவன். எதிலும் ஆதாயம் காணும் சமூகம் இது என அனுபவத்தில் கண்டிருப்பவன். எனக்கு மயக்கம் தெளிஞ்சி போச்சி. யாருமே வேண்டாம்! நல்லவர்கள் கூட!

கவலைப்படாதே நானிருக்கேன் என்ற நல்லத்தனம் எனக்கு வேண்டாம். அதுவும் சுமை. ஆயுசுக்கும் என்னை கடனாளியாக்கும்.

நல்ல காதல் தோன்றிய பிறகு காமம் விலகி நிற்கும். எப்போது தேவையோ அப்போது கைகட்டி அருகே வந்து சேவைகள் செய்யும். வெறும் காமம் அபத்தம். காதலோடு கூடிய காமம் சொர்கம்.

மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். சந்தோஷம் துக்கம், நட்பு, பகைமை எல்லாம் மனம் காட்டும் மாயைகள். கோபம் குறைய நியாயங்கள் தெளிவாய் தெரியும். ஆத்திரம் குறைய நல்லது கெட்டது எதுவென்று அறியமுடியும்.

கற்றல் எப்போது நிற்கும்? கற்ற பிறகே! ஆசை எப்போது அடங்கும்? அனுபவித்த பிறகே!. ஆசைதான் கற்றுக்கொள்ளல். ஆசைதான் வாழ்க்கை. கற்றுக்கொள்ள, கற்றுக்கொள்ள, அனுபவிக்க அனுபவிக்க உள்ளே ஒரு நிறைவு வரும். போதும் என்கிற நிறைவு வரும் வரை கற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

எதுவுமே கொடுக்கமுடியாத போது என்னையே எடுத்துக்கோங்கிற விஷயம் பெண்ணிம் மட்டுமே உண்டு. ஆண் இப்படி எதைக் கொடுப்பான்? யார் உயர்வு?

நான் தான தருமம் பண்ணல. ஆம்பளைக்கும் அலையல. எனக்குப் பிடிச்சிருந்தது, என்னைக்கொடுத்தேன். இதுக்கு நன்றி எதுக்கு?

கேலிக்கு கோபப் படுபவன் தோற்றுப் போனவன். வாழ்க்கையின் ரசம் தொலைத்தவன். வாழ்தலின் வெளிப்பாடு இடி போன்ற சிரிப்பு. இடைவிடாத ஆனந்தம். எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் தன்மை.

தொடர்புடைய இடுகை;

 பாலகுமாரன் பக்கம் - பாலகுமாரன் ரஜினிகாந்த் உரையாடல்

4 கருத்துகள்:

  1. மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். சந்தோஷம் துக்கம், நட்பு, பகைமை எல்லாம் மனம் காட்டும் மாயைகள். கோபம் குறைய நியாயங்கள் தெளிவாய் தெரியும். ஆத்திரம் குறைய நல்லது கெட்டது எதுவென்று அறியமுடியும்.
    ///////////////////////////////////////

    உண்மை ஐயா உண்மை

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றி சிட்டுக்குருவி அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. பாலகுமாரன் அற்புதமான எழுத்தாளர்.அவரது படைப்புகள் பற்றி நானும் சில பதிவுகள் இட்டிருக்கிறேன். நேரம் இருப்பின் பார்வை இடவும்.
    பாலகுமாரனின் முதலைக் கவிதைகள்-பகுதி 2

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி முரளிதரன் அவர்களே! கண்டிப்பாக வருகிறேன்.

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!