வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

புகழ்ச்சிக்கு மயங்காதோர் யார் இந்த உலகில்?

இணையம் ஒரு சுவாரஸ்யமான கடல். எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் அதில் நீந்திக்கொண்டிருக்கலாம். விட்டுப்போக மனசே வராது. என் இளமைக்காலத்தில் எந்த நேரமும் புத்தகமும் கையுமாகவே இருந்திருக்கிறேன். எங்கு யாரிடம் புத்தகத்தைப் பார்த்தாலும் எப்படியாவது கேட்டு வாங்கிவிடுவேன். எனக்குப் பிடித்த புத்தகங்களை அடுத்தவர்க்கும் படிக்கக் கொடுப்பேன். அந்தப் பழக்கம்தான் இப்போது இணையத்திலும் தொடர்கிறது.

தமிழில் வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த போது அப்பப்பா எத்தனை வலைபூக்கள் எப்போது படிப்பது இதையெல்லாம் என்று மலைப்பாக இருந்தது. இப்போது தேர்ந்தெடுக்கபட்ட பதிவுகளை மட்டுமே படிக்க முடிகிறது. வலைப்பக்கம் ஆரம்பித்த பிறகு அதுவும் முடிவதில்லை. எல்லா பதிவுகளையுமே படிக்க ஆவலாக இருந்தபோதும் நேரம் கை கொடுப்பதில்லை. நம்முடைய பதிவுகளை வந்து வாசிக்கறவர்களுடைய பதிவுகளையாவது போய்ப் படிக்க வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியினாலேயே சில பதிவுகளாயாவது படிக்க முடிகிறது.

யார் வருவார் நம் பதிவுகளைப் படிக்க என்று சோர்ந்துபோன நேரத்தில் படிப்படியாய் வாசகர்கள் வரத்தொடங்கியுள்ளார்கள். இந்த நேரத்தில் என் பதிவுகளை மனப்பூர்வமாக பாராட்டி எழுதி அறிமுகப் படுத்தியவர்கள் பலர். அவர்களில் 'நாற்று' வலைப்பதிவின் நிரூபன் மற்றும் மகிழம்பூச்சரம் வலைப்பதிவின் 'சாகம்பரி' ஆகியோர் முக்கியமானவர்கள்.

இதில் சகோதரி சாகம்பரி முதலில் வலைச்சரத்தில் என் பதிவை அறிமுகம் செய்தார். இப்போது லீப்ஸ்டர் விருது வழங்கிக் கௌரவித்திருக்கிறார்.


லீப்ஸ்டர்வலைப்பதிவர்களுக்கு ஜெர்மனியில் வழங்கப்படுகின்ற விருதாம்..அதனது அர்த்தம் 'மிகவும் பிடித்த என்பதாகும்'. "இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைப் பதிவுகளுக்கு விருது வழங்க வேண்டும்

புகழ்ச்சிக்கு மயங்காதோர் யார் இந்த உலகில்? எனக்கு விருது வழங்கி என்னை உற்சாகப்படுத்தவும் நண்பர்கள் இருக்கும்போது அதை மகிழ்ச்சியோடும், நன்றியோடும் ஏற்றுக்கொள்வதுதானே முறை. இதை ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை வலையில் காப்பி-பேஸ்ட் செய்து கொள்ளவேண்டுமாம். ம்... செய்தாயிற்று! அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் நமக்குப்பிடித்த 5 வலைப்பதிவர்களுக்கு வழங்க வேண்டுமாம். வழங்கிட்டாப்போச்சு. 

விருது வழங்கிய 'சாகம்பரிக்கு' நன்றி தெரிவித்து கீழ்க்கண்ட எனக்கு மிகவும் விருப்பமான இந்த வலைப்பக்கங்களுக்கு லீப்ஸ்டர் விருதை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1. என். உலகநாதன். இயல்பான நடையில் யதார்த்தமாக எழுதும் இவரின் எல்லா பதிவுகளுமே என்னைக் கவர்ந்தவை.

2. My Diary மாலா வாசுதேவன் என்ற பெயரில் பதிவுகளை எழுதும் இவரின் ஒரே ஒரு பதிவைப் படித்ததுமே எனக்குப் பிடித்துப் போயிற்று.

3. மிடில் கிளாஸ் மாதவி சுவாரஸ்யமான வாழ்க்கை அனுபவங்களையும், சுவையான சிறுகதைகளையும் கொண்டது.

4. வேளாண் அரங்கம் வேளாண்மைச் செய்திகளை ஒட்டுமொத்தமாகத் தருகிறது இந்தத்தளம். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.

5. நிலாக்கால நினைவுகள். அறிவியல் செய்திகளை மிகவும் அழகாகத் தருகிறது இந்ததளம்.

Rules :

•Thank your Liebster Blog Award presenter on your blog.
•Link back to the blogger who presented the award to you.
•Copy and paste the blog award on your blog.
•Present the Liebster Blog Award to 5 blogs of 200 followers or less who you feel deserve
to be noticed. (Some say just 3 or more blogs of less than 200 followers each).
•Let them know they have been chosen by leaving a comment at their blog.

அன்புடன்,

12 கருத்துகள்:

  1. தங்களின் வருகைக்கும் எனது நன்றி திரு.உலகநாதன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  2. super ayyaa....

    viruthu petra ellarukkum iniya vaazthukkal ...
    ungalukku sirappu vaazthukkal

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கலை!

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்தி மகிழ்கிறேன் அன்புத்
    தோழரே .
    முற்றிலும் புதிய அறிமுகங்கள்.
    நேரம் கிடைக்கும் போது தவறாமல்
    சென்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. லீப்ஸ்டர் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே! உங்களுடைய அறிமுகப் பதிவுகளும் சிறப்பானவை!

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஸ்ரவாணி அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஞானசேகரன்!

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி கவிப்ரியன். மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் பெற்றேன்

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் வருதை ஏற்றுக்கொண்டமைக்கும் நன்றி மாலா வாசுதேவன்!

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!