தனது கட்சி ஆட்சியிலிருக்கும்போதே முன்னாள் முதல்வாரகியிருக்கிற ஜெயலலிதாவின் தண்டனை
குறித்த எனது கருத்துக்களை பதிவிடலாம் என்று எண்ணியிருந்தேன். அந்த நேரத்தில்முடியவில்லை.
ஆனாலும் தினம் தினம் பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம்தான் இருக்கிறது. பதிவுலகம் மந்தமாக
இருந்தாலும் முகநூலில் கலந்து கட்டி அடிக்கிறார்கள்.
நம்முடைய பதிவுகள் பழையவைகளை நினைவு படுத்தும் மறக்க முடியாத நினைவுகள்தானே! ஜெயலலிதா
அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளாகி பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில்
படு தோல்வி அடைந்த தருணத்தில் ஜெயலலிதா பற்றி சுப்ரமண்யம் சுவாமி 1991-1996 காலகட்டத்தில்
சொன்னவற்றிலிருந்து சில துளிகள்….
இப்போது ஆட்சியில் இருப்பது (ஜெயலலிதா) ஒரு பிசாசு. ராட்சசி.
இவரை நான் பதவியில் உட்கார வைத்தேன். எத்தனை அடி அடித்தாலும் அவரை சிறையில் போடாமல்
விடமாட்டேன். 1992-ல்.
ஜெயலலிதாவுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே ரகசியத்தொடர்பு
உள்ளது. ராஜிவ் காந்தியைக் கொலை செய்யப்போவதாக விடுதலைப் புலிகள் ஏற்கனவே தெரிவித்து
இருந்ததால்தான் தமிழ்நாட்டில் ராஜிவ் காந்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜெயலலிதா
கலந்து கொள்ளவில்லை. 22.07.1995-ல் ஜெயின் கமிஷனில் கூறியது.
ஜெயலலிதா என்னிடமிருந்து தப்பவே முடியாது. அவரை அகற்றாமல் நான்
தூங்க்கப் போவது இல்லை. ஜெயலலிதாவிடமிருந்து ரூ.2000 கோடியைப் பிடுங்கி அரசிடம் ஒப்படைத்து
விட்டுத்தான் நான் தூங்கப் போவேன். சந்திரலேகா மீது திராவகம் வீசப்பட்ட வழக்கு போன்றவற்றில்
ஜெயலலிதா கிடுக்கிப் பிடி போல மாட்டிக்கொண்டிருக்கிறார்.. அதிலிருந்து ஜெயலலிதா தப்பிக்கவே
முடியாது… சினிமா கலாச்சாரம் மாற வேண்டும். 30.11.1995- மாலை முரசில்.
அ.தி.மு.க.வோடு சேர்வது ஒரு அரசியல் தற்கோலை ஆகும். அதனுடன்
காங்கிரசு மட்டுமல்ல, வேறு எந்தக் கட்சியும் சேரக்கூடாது, ஏனென்றால் ஜெயலலிதா ஒரு அரசியல்
கிரிமினல்… சந்திரலேகா மீது திராவகம் வீசப்பட்டது. வக்கீல் விஜயன், சண்முக சுந்தரம்
ஆகியோர் பயங்கரமாக தாக்கப்பட்டனர். இப்படிப்பட்ட ஜெயலலிதாவோடு கூட்டு சேர்வதை தார்மீக
அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது. 15.03.1996 மாலைமுரசில்.
ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு பயங்கரக் காடாகி விட்டது. அந்தக்
காட்டில் உள்ள கொள்ளைக்காரி ராணி போல ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார். இப்பட்டிப்படவரோடு
காங்கிரஸ் கூட்டு சேரவே கூடாது. 24.03.1996 மாலை முரசில்.
தமிழக சட்டசபை, பாராளுமன்ற தேர்தலில் பெருமளவு தில்லு முல்லு
நடந்ததாக ஜெயலலிதா கூறியுள்ளார். இது தமிழக மக்களை அவமதிப்பதாகும். தனது எந்த
தவறுக்கும் ஜெயலலிதா வருந்தவில்லை. தினகரன் 13.05.1996 ல்.
நாற்பது திருடர்களான சசிகலாவின் உறவினர்களைப் பிடித்து சிறையில்
அடைத்து விட்டாலும், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பவர் அலிபாபா என்ற ஜெயலலிதாதான். அவர்
மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாலை முரசு 05.07.1996-ல்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக ராட்சஸியான ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிப்பதற்காகவே
நான் தமிழகத்தில் தங்கியுள்ளேன். ஜெயலலிதாவின் ஆட்யை ஒழிக்க பாடுபட்டவன் நான்தான்.
நான் சமைத்தேன், அதை கலைஞர் சாப்பிட்டு விட்டார். ஜெயலலிதாவிடம் 2000 கோடி உள்ளது.
அதை வைத்து அவர் அதிகாரிகளை, அரசியல்வாதிகளை சுலபமாக விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சிக்கு
வர முயற்சி செய்வார். ஆனால் நான் அதற்கு விடமாட்டேன். ஜெயலலிதா ஆட்சியை விட்டுப்போனது
மட்டுமல்லாமல் ஜெயிலுக்கும் செல்ல வேண்டும். போக வைப்பேன். ஒரு ரூபாய் சம்பளம் வால்கிய
ஒருவர் எப்படி இத்தனை கோடிகள் சேர்த்தார்..? ‘சுப்ரமண்யம் சுவாமி ஒரு கொசு’ என்று ஜெயலலிதா
சொன்னார். இப்போது சசிகலாவை அந்தக் கொசுதான் கடித்து துன்புறுத்துகின்றன. அது விரைவில்
ஜெயலலிதாவையும் கடிக்கும். மாலைமுரசு 12.07.1996-ல்.
ஜெயலலிதாவை விரைவில் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். அதற்குத்தான்
மக்கள் ஓட்டுப்போட்டு கருணாநிதியை தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர் நல்லவர் என்பதாலோ,
பாசங்கொண்டோ தேர்ந்தெடுக்க வில்லை. ஆகவே கருணாநிதி ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்,
தி.மு.க. ஆட்சியில் இருக்க அருகதை இல்லை. எனவே ஜெயலலிதாவை விரைவில் ஜெயிலுக்கு அனுப்ப
வேண்டும். மாலை முரசு 22.07.1996-ல்.
வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா அளித்துள்ள விளக்கம் ஒன்றே போதும், ஜெயலலிதாவை ஜாமீனில் வெளிவர முடியாதபடி சிறையில் தள்ளலாம். இதற்காக ஆதாரங்களை தேடியலைய வேண்டியதில்லை. மாலை முரசு 24.07.1996-ல்.
வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா அளித்துள்ள விளக்கம் ஒன்றே போதும், ஜெயலலிதாவை ஜாமீனில் வெளிவர முடியாதபடி சிறையில் தள்ளலாம். இதற்காக ஆதாரங்களை தேடியலைய வேண்டியதில்லை. மாலை முரசு 24.07.1996-ல்.
ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு மௌனம் சாதித்து வருகிறது. எனவே பொது
மக்கள் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளதோ என்று
சந்தேகப் படுகிறார்கள். மாலை முரசு 04.08.1996-ல்.
ஆதாரம்; 1996 ஆகஸ்ட் மாத துக்ளக் வார இதழ்.
நண்பரே,
பதிலளிநீக்குவந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்! அப்டீன்னு நீங்க சொன்னதுக்காக சொல்லலை. சுவாமியைப் பற்றி அப்டேட்டா இருக்கிறீங்களே, இதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்கங்களேன்ற நல்ல எண்ணத்துலே சொல்றேன்.
சுவாமிகளின் சாகசங்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே படிக்கவும்.
http://vimarisanam.wordpress.com/2014/09/20/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA/
நன்றி.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி காவிரி மைந்தன். நீங்கள் கொடுத்த இணைப்பிற்குச் சென்று பார்த்தேன். அடேயப்பா சுப்ரமணிய சுவாமியைப் பற்றி இத்தனை பதிவுகளா? இனிதான் ஒவ்வொன்றாக படிக்க வேண்டும். தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎனக்கும் இதே போல ஆசையுண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயத்தில் பேசிய பேச்சுக்களை தொகுக்க வேண்டும் என்று. நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே.
பதிலளிநீக்கு