வியாழன், 11 அக்டோபர், 2012

மாற்றத்தை ஏற்படுத்த 21 வழிகள்







சுற்றுச்சூழல் சீரழிவு சமாச்சாரங்கள் 


தமிழர்களைப் பொறுத்தவரை இது யாருக்கோஎங்கோ நிகழ்ந்து கொண்டிருப்பதாகத்தான் நினைவு. இவர்களது அதிகபட்ச சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு என்பது பிளாஸ்டிக் பொருள்களை வீதிகளில் வீசக்கூடாது என்பதுதான்.

தனக்கு மட்டுமல்ல என்றென்றைக்கும் சந்ததிகளுக்கும் சேர்த்து உலை வைக்கும் அணு உலைகள் குறித்தோஅதனது கதிரியக்க பயங்கரங்கள் குறித்தோ எந்தவித புரிதல்களுமில்லை இவர்களிடம்.

ஒரு போபால் விஷவாயுப் பேரழிவைக்கூட தாங்க முடியாத இத் துணைக்கண்டம் ஒருவேளை கதிரியக்க கசிவுக்கு ஆளாக நேர்ந்தால் என்ன கதியாகுமென்பது கூட அக்கறை இல்லை.

கார்பன் டையாக்ஸைடு வெளியாவதைக் குறைப்பதன் மூலம் புவி வெப்பமடைவதைத் தவிர்க்கலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

  1. பல்புகளை மாற்றுங்கள்;  பல்புகளுக்கு பதிலாக சி.எஃப். எல் மின்விளக்குகளுக்கு மாறுங்கள். அவை குறைவான மின்சக்தியில் நீடித்து உழைக்கின்றன.

  1. சூரிய ஒளி அடுப்புகள்; குளிப்பதற்கு தண்ணீரை சூடுபடுத்த சூரிய ஒளி கருவிகளைப் பயன்படுத்துங்கள்.

  1. பசுமைக் கட்டடங்கள்; வீடுகள், அலுவலகங்கள் கட்டத் திட்டமிடும்போது மின்சாரம் குறைவாக செலவாகும்படி திட்டமிடக்கூடிய கட்டிட வடிவமைப்பாளரைப் பயன்படுத்துங்கள். குளிரையும் வெப்பத்தையும் அவை தாக்குப் பிடிக்கும்படி அவை கட்டப்பட வேண்டும்.

  1. கம்ப்யூட்டர்களை அணையுங்கள்; கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தாதபோது அவற்றை அணைத்துவிடுங்கள். மூன்று 60 வாட்ஸ் பல்புக்கான மின்சாரம் அதில் செலவாகிறது.

  1. விளக்குகளை அணையுங்கள்; தூங்கும்போதும் அலுவலகத்தை மூடுப்போதும் எல்லா மின்சாதனங்களின் இயக்கத்தை நிறுத்திவிடுங்கள்.

  1. தண்ணீரைச் சேமியுங்கள்; தண்ணீர் பயன்பாட்டை குறையுங்கள். வீணாக தண்ணீரை செலவழிக்காதீர்கள். மழைநீரை சேகரித்து நிலத்தடி நீரின் அளவை அதிகப்படுத்துங்கள். புல்வெளி, பயிர்களுக்கு சொட்டு நீர் பாசன வழிமுறையைக் கடைபிடியுங்கள்.

  1. குறைவான எரிசக்தி; பயணங்களைக் குறைத்து வாகன எரிபொருள் தேவையைக் குறையுங்கள். பெட்ரோல் சிக்கனம் பற்றி யோசிக்கவேண்டிய தருணம் இது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் எரிக்கப்படும்போதும் நான்கு கிலோ கார்பன் டையாக்ஸைடு காற்று மண்டலத்தில் கலக்கிறது.

  1. டயர்களைக் கவனியுங்கள்; கார்கள், பைக்குகளின் டயர்களில் சரியான அழுத்தத்தில் காற்று அடிக்கப்பட்டிருப்பது எரிபொருளைச் சேமிக்கும்.

  1. எரிசக்தியைச் சேமிக்கும் பொருள்களை வாங்குங்கள்; அடுத்த முறை இஸ்திரிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றை வாங்கும்போது அவை குறைவான மின்சக்தியைப் பயன்படுத்துபவையா என்பதைப் பார்த்து வாங்குங்கள். செலவும் மிச்சம். சூழலும் மாசுபடாது.

  1. விமானப் பயணங்களைக் குறையுங்கள்; போன் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ வேலைகளை முடிக்க முயலுங்கள். விமானப் பயணங்களைத் தவிருங்கள். பணமும் மிச்சம். சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

  1. நடப்பது நல்லது; வீட்டின் அருகில் இருக்கும் கடைக்கு வாகனத்தில் செல்லாதீர்கள். நடந்து செல்லுங்கள். நிறைய வேலைகள் இருந்தால் மட்டுமே வாகனத்தை எடுங்கள்.

  1. தாக்குதலுக்கு ஆயத்தமாக இருங்கள்; டெங்கு, வயிற்றுப்போக்கு நோய்கள் அதிகரிக்கலாம். உங்கள் வீட்டின் அருகில் நல்ல வசதியுடன் கூடிய மருத்துவமனைகள் இருக்கிறதா என்று பாருங்கள். சீக்கிரம் குணமடையலாம். உயிர் சேதத்தை தவிர்க்கலாம்.

  1. தண்ணீர் காய்ந்துவிட்டது; குளித்து முடித்தவுடன் கெய்சர்களை அணைத்துவிடுங்கள். அதே போல நல்ல ஷவர்களைப் பயன்படுத்தினால் தண்ணீர் குறைவாக செலவழியும். நல்ல குளியல் அனுபவமும் கிடைக்கும். முகத்திற்கு சோப்பு போடும்போதோ ஷேவ் செய்யும்போதோ குழாய்களை மூடுவதால் தண்ணீர் வீணாகாது. விரைவிலேயே தண்ணீர் ஓர் அரிய பொருளாகக் கூடும்.

  1. குறைவாக வாங்குங்கள்; நீங்கள் யோகியைப் போன்று வாழவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ஏதாவது ஒரு பொருளை வாங்கும்போது, அந்தப் பொருள் உண்மையிலேயே தேவையா என்று பாருங்கள்.

  1.  மீண்டும் பயன்படுத்துங்கள்; பொருட்களை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியர்கள்தான் சிறந்தவர்கள். அந்தக் கலையை மறந்துவிடக்கூடாது.

  1. வேண்டாம் பிளாஸ்டிக் பைகள்; பலமுறை சொல்லப்பட்ட அறிவுறைதான். யாரும் கேட்பதில்லை. கடைக்குச் செல்லும்போது ஒரு பையை எடுத்துச்சென்றால் நிலத்தை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பையை தவிர்க்கலாம்.

  1. பொது போக்குவரத்து; அலுவலகத்திற்கு சொந்த வாகனத்தில் செல்லாதீர்கள். ரயில், பஸ்களைப் பயன்படுத்துங்கள். வெளியூர்களுக்கு ரயிலிலேயே செல்லுங்கள்.

  1. காகிதம் வேண்டாம்; நண்பருக்கு எதையாவது தெரிவிக்க விரும்பினால் ஃபோன் செய்யுங்கள். அல்லது மின்னஞ்சல் செய்யுங்கள். எல்லாவற்றுக்கும் காகித்ததைப் பயன்படுத்தும் பழக்கத்தை நிறுத்துங்கள்.

  1. மரம் வளருங்கள்; கார்பன் டையாக்ஸைடை நீக்க மரங்கள்தான் சிறந்த வழி. ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் 6 பில்லியன் மரங்கள் வளர்ந்துகொண்டிருக்கும். வளி மண்டலத்திலிருக்கும் ஆயிரக்கணக்கான டன் கார்பன் டையாக்ஸைடு நீக்கப்படும்.

  1. பிறருக்கும் சொல்லுங்கள்; உங்களைப்போல உங்கள் அருகில் இருப்பவர் இயற்கை வளங்களைப் பாதுகாக்காவிட்டால் உங்களுக்கும் பிரச்னை. அவரையும் ஈடுபடுத்துங்கள்.

2 கருத்துகள்:

  1. அருமையான யோசனைகள். இதில் முக்கால்வாசி நான் ஏற்கெனவே கடைப்பிடிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு பழனி கந்தசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!