செவ்வாய், 17 ஜனவரி, 2012

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை!


ஆயிரத்தில் ஒருவன் - மறக்க முடியாத சினிமா


பாடல்களும் இசையும் 

இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அதுவரை தமிழ்த்திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த 'மெல்லிசை மன்னர்கள்' விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்குத்தான்.
அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ்சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகி விட்ட ஒன்று

இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி..பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்களில் ஆயிரத்தில் ஒருவன் கண்டிப்பாக இருக்கும். காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.

1)
பருவம் எனது பாடல்

நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.

"
பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்

கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்"

பல்லவியைபாடிமுடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ‘HUMMING’ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ்ஸ்தாயி வரையில் கொண்டுவர‌, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து

"
இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்"

என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை. 



2) '
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை'

வழக்கம்போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.

"
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே"

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத‌ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.

3) '
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ'

இந்தப் பாடலைப்பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப்பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க‌ள். பாதிப்பாட‌ல் அர‌ண்ம‌னை செட்டிலும் பாதிப்பாட‌ல் கார்வார் க‌ட‌ற்க‌ரையிலும் க‌ண்டினியூட்டி கெடாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

4) '
உன்னை நான் ச‌ந்தித்தேன் நீ ஆயிர‌த்தில் ஒருவ‌ன்'

பி.சுசீலா தனியாக‌ப் பாடிய‌ பாட‌ல். கூட‌வே ஆண்க‌ளின் கோர‌ஸ். ம‌ணிமாற‌னைப் பிரிந்த‌ பூங்கொடி, செங்க‌ப்ப‌ரின் அர‌ண்ம‌னையில் சோக‌மே உருவாக‌ பாடும் பாட‌ல், கூட‌வே க‌ப்ப‌லில் போய்க் கொண்டிருக்கும் ம‌ணிமாற‌னைக் காண்பிக்கும்போது, அவ‌ர‌து கூட்டாளிக‌ளின் உற்சாக‌மான‌ கோர‌ஸ்.

"
பொன்னைத்தான் உட‌ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம‌ன‌மென்பேன்
க‌ண்க‌ளால் உன்னை அள‌ந்தேன் தொட்ட‌ கைக‌ளால் நான் ம‌ல‌ர்ந்தேன்
உள்ள‌த்தால் வ‌ள்ள‌ல்தான் ஏழைக‌ளின் த‌லைவ‌ன்"

அடுத்து வ‌ரும் இசை 'பிட்'டைக் கேட்க‌ முடியாது, கார‌ண‌ம் ப‌ல‌த்த‌ கைத‌ட்ட‌லும், விசில் ச‌த்த‌மும். பாட‌ல் முடியும்போது, கோர‌ஸுட‌ன் க‌ப்ப‌ல்க‌ள் முல்லைத்தீவு க‌ரையில் ஒதுங்குவ‌தாக‌ காட்டுவ‌து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கருப்பு நிற உடையில் அழகுப்பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி)

(தொடரும்....)


இதே படத்தின் இன்னொரு விமர்சனம் நம்ம ஊரு கடையம் என்ற வலைப்பக்கத்தில்...

3 கருத்துகள்:

  1. ஒ கவிப்பிரியன் !
    முதலில் பதிவு பற்றி. என்றும் புதிதாய்
    இருக்கும் சிரஞ்சீவித் தன்மை பெற்ற
    பாடல்கள் அந்த காலப் பாடல்கள். உங்கள்
    நினைவுஅலைகள் ரசிக்கத்தக்கவை.
    உங்களை வரவேற்கும் முகமாகவே
    நான் மலர்ச்செண்டு கொடுத்து இருக்கிறேன்.
    இது நீங்கள் உறுப்பினர் ஆகி என் எழுத்தை ஆங்கரிததிர்க்கு
    நான் செலுத்தும் ஒரு சிறு நன்றி காணிக்கை. அவ்வளவே.
    நீங்கள் இதை தங்கள் வலைப்பூவில் பெரிதாக
    பிரகனபடுத்தி இருப்பது கண்டு வியப்பின்
    உச்சிக்கே சென்று விட்டேன்.
    நெகிழ்ச்சியாக உள்ளது.
    மிக்க நன்றி தோழரே !

    பதிலளிநீக்கு
  2. really romba romba சூப்பர் ...... jolly yaa pattup paadi padikka vaicitinga.....

    supper dupper ......

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி ஸ்ரவாணி! எப்படி இருப்பினும் நானும் எனது நன்றியினைத்தான் தெரிவித்திருக்கிறேன். தங்களின் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மீண்டும் நன்றி!

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!