சனி, 31 டிசம்பர், 2011

இளமைக்குச் சாபமோ…?



ஆணுக்குப் பெண்ணின்று

சரிசம்மாய் சிறக்கின்ற

இக் காலத்தில்

ஆண் பெண் நட்பு மட்டும்

விரிவடைய ஏன் வில்லங்கம்?

ஆணும் பெண்ணும் பழகுவதென்றாலே

அனைவருக்கும் தெரிந்த்து

காதல் தானோ?

அடுத்து கல்யாணம்தானோ!?

ஆண் பெண் நட்பையே

இளமைக்குச் சாபமாய்

யார் மாற்றியது?

இந்த நட்பை அங்கீகரிக்கிற நாளெப்போது

தேடுவோம் நாமே!

18 வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கவிதை இது.

8 கருத்துகள்:

  1. நட்பிற்கு இலக்கணம் வகுத்தது யாரென நீங்கள்
    கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும் அழகு...
    பாலுணர்வு தவிர்த்து நட்பு பாராட்டும் எண்ணம்
    தழைத்தோங்க வேண்டும்.



    பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆண் பெண் நட்பையே சாபமாக மாற்றியது யாரோ ?

    சரியான கேள்வி .
    பதில் கிடைக்குமா ?

    பதிலளிநீக்கு
  3. உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உடலமைப்பை காரணாமாக காட்டும் சமூகத்திற்கு சரியான சவுக்கடி. பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும், கருத்திற்கும், கவிதை வாழ்த்திற்கும் நன்றி மகேந்திரன் அவர்களே! தங்களுக்கும் எனது இனிய இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகைக்கும், கருத்திற்கும், நன்றி சசிகலா! அவர்களே! தங்களுக்கு எனது இனிய இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகைக்கும், கருத்திற்கும், நன்றி சுப்ரமணியன்! அவர்களே! தங்களுக்கு எனது இனிய இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. wavvvvvvvvvv..superuuuuuuuuu...

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!