சனி, 20 ஆகஸ்ட், 2011

காதல் உணரும் தருணங்கள்



இரண்டு பெஞ்சுகளின் 
இடைவெளியில் எதிரெதிர்
வரும்போது என்னை உரசலாம் 
கொஞ்சம்
நெருக்கும் பஸ்ஸில் 
கூட்டத்தில் அலைக்கழித்து
ததும்பும் போது என் மீது படலாம்
காற்று படுத்திருக்கும் 
காரிடாரில் நடக்கையில்
வீசி நடக்கும் கையை 
என் மேலே வீசலாம்
இருண்ட நாலகத்தில் 
புத்தகங்களைமேலடுக்கில் தேடுகையில் 
என் தோளை இடிக்கலாம்
எக்ளேர்ஸோ பாப்பின்ஸோ 
என்கெனத் தருகையில்
உரிமையெடுத்து உள்ளங்கையில் அழுத்தலாம்
சட்டையில் ஏதோ பூச்சி எனக் கத்தும்
பயந்தாங்க்கொள்ளியே, நீயே தட்டலாம்
வெள்ளை பேசினில் 
டெஸ்ட் ட்யூப் கழுவும்போது
உன் கைகள் என்னோடு கலக்கலாம்
கோயில் பிரசாதத்தைத் 
தாமரை உள்ளங்கையில்
ஏந்தி நீட்டி சிரிக்காமல் 
என் நெற்றியில் இடலாம்
கேலி பேசி உன்னை 
நான் அழவைக்கும்போது
செல்லமாய்க் கண்டித்து 
என் நெஞ்சில் குத்தலாம்
தோழிகளிடம் முகப்படுத்தி 
வைக்கையில்
மணிக்கட்டைத் தொட்டு 
உரிமையுடன் சொல்லலாம்
இத்தனை வாய்ப்புகள் இருந்தும்
இதையெல்லாம் விடுத்து
எங்கோ இருக்கும் என் இதயத்தை
அழுத்தமாய்த் தொட்டது 
ஏனடி தோழி…?

கவிதைக்கு சொந்தம் கொண்டாடக் கூடியவர் -  கிருஷ்ணன்.

6 கருத்துகள்:

  1. நல்ல கவிதை நன்பா
    //

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பர் துரைராஜ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றி மதுரை சரவணன். தொடர்ந்து வந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!