சனி, 19 செப்டம்பர், 2020

மறக்க முடியாத நினைவுகள் - ஒரு வாசகரின் விமர்சனம்

ஆசிரியரின் அனுபவங்கள், சமூகத்தின் நிகழ்வுகள் மீதான ஆசிரியரின் கோபம், பத்திரிக்கைகளில் எழுதிய வாசகர் கடிதங்கள், அரசியல் பார்வை ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல்.

ஆசிரியரின் கருத்து சுதந்திரம் வெகுவாகக் கவர்ந்தது. தவறுகளைத் துணிவாக சுட்டிக்காட்டி எழுதியிருக்கும் அரசியல் சார்ந்த கட்டுரைகள் அருமை.

கணினி கற்றுக்கொள்ள செய்த முயற்சி கள், நற்பணிமன்ற செயல்பாடுகள் சிறப்பு.

எம். எஸ். உதயமூர்த்தி பற்றிய கட்டுரையை வாசிக்கும் போது என் அப்பாதான் நினைவுக்கு வந்தார். என் சிறுவயதில் வார இதழில் வெளிவந்த எம். எஸ் . உதயமூர்த்தியின் கட்டுரைகளை அப்பா பைண்ட் செய்து வைத்திருப்பார். பலமுறை என்னை படிக்கச் சொல்லியும் நான் இதுவரை படித்ததில்லை. அப்பாவின் இறப்புக்குப் பின் அவருடைய தொகுப்புகள் இடமின்மையால் பரணுக்குப் போய்விட்டது. இந்தக் கட்டுரை அந்தத் தொகுப்புகளை எடுத்து வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. அதற்காக ஆசிரியருக்கு நன்றி.

மறக்க முடியாத ஆசிரியர்கள் கட்டுரையைப் படிக்கும்போது உண்மையிலேயே மனதுக்கு மகிழ்வாக இருந்தது. இந்த வயதில் கூட நம்முடைய ஆசிரியர்களை எண்ணிப்பார்த்து மகிழ்வும் நன்றிகூறவும் முடியுமென்றால், ஆசிரியப் பணிக்கு இதைவிட வேறென்ன பெரிதாக விருதுகள் இருந்துவிட முடியும். இக்கட்டுரை என்னுடைய ஆசிரியப் பெருமக்களையும் நினைத்துப் பார்த்து தலைவணங்க வைத்தது உண்மை.

ஏன் எழுத வேண்டும் கட்டுரையில் ஆசிரியர் குறிப்பிட்டது போல நம் இருப்பை உணர்த்துவதைவிட ஒரு மன நிம்மதி கிடைப்பது என்னவோ உண்மைதான். நானெல்லாம் 5 மாதங்களில் திடீரென எழுதத் தொடங்கியவள். அதன் காரணமாகவே பல வருடங்கள் கழித்து மீண்டும் அதிகம் வாசிக்கவும் தொடங்கியிருக்கிறேன்.

பொதுவாக நம்முடைய சுய அனுபவங்களை நூலாக எழுதுவதில் பிறருக்கு என்ன இலாபம் என்ற எண்ணம் எனக்குண்டு. ஆனால், மற்றவருடைய அனுபவங்கள் நம்மை நாமே ஒருமுறை திரும்பப் பார்ப்பதற்கும், நாம் மறந்துவிட்டதை நினைவு படுத்தவும் நிச்சயம் உதவுகின்றன.

புத்தக வடிவமைப்பும் சிறப்பாக இருந்தது. இப்புத்தகம் எனக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கியது. வாழ்த்துகள்.

- கற்பகாம்பாள் கண்ணதாசன்


8 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது… [Reply]

வாழ்த்துகள் நண்பரே...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

சிலவற்றை ஆவணப்படுத்தல் மிகவும் முக்கியமும் மனநிறைவும் பெற வைக்கும்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது… [Reply]

வாழ்த்துகள்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@KILLERGEE Devakottai வருகைக்கு வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@திண்டுக்கல் தனபாலன் ஆம் நண்பரே. வலைப்பதிவுகளில் எழுதியவற்றைத்தான் தொகுத்து கிண்டில் நூலாக்கியிருக்கிறேன். வருகைக்கு மிக்க நன்றி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@கரந்தை ஜெயக்குமார் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

வெங்கட் நாகராஜ் சொன்னது… [Reply]

மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@வெங்கட் நாகராஜ் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!