கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் திருநாளன்று தமிழ்நாட்டில் இருக்க முடியாத சூழ்நிலை. என்னதான் இருந்தாலும் இந்த மாதிரி கலாச்சார திருவிழாக்களில் நம் ஊரில் இருக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியே அலாதியானதுதான்.
கடந்த மாதம்தான் தமிழகம் வந்திருந்தேன். பெரும்பலும் ரயில் பயணத்தைத்தான் நம்ப வேண்டியிருப்பதால் முன்பதிவு செய்து வைத்தாலன்றி பயணமே செய்ய முடியாத துர்பாக்கிய நிலை. அந்த அளவுக்கு ரயில் பயணம் என்பது நரகமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் வேறு வழியில்லை. என்னுடைய கிராமத்தின் பொங்கல் திருவிழாவில் பங்கெடுக்கவும், புத்தகத்திருவிழாவிற்கு வந்து நான் விருப்பப்பட்ட புத்தகங்களை வாங்கவும் மீண்டும் வருவதற்கு ஆசைதான். இனி அதற்கு வாய்ப்பில்லை.
பேச்சுத் துணைக்குக்கூட இங்கு ஒரு தமிழரும் கிடையாது. ஏக்கமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது? இணையம் மட்டும் இல்லாமல் இருந்தால், பதிவுலகம் என்ற ஒரு உலகம் இல்லாவிட்டால் என் பாடு திண்டாட்டம்தான். அதனால் இப்போதைக்கு எனது சொந்தங்கள் எல்லாம் பதிவுலகத் தோழர்களும், தோழிகளும்தான்.
எனவே எனது சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நட்புடன்,
கவிப்ரியன்.
6 கருத்துகள்:
தித்திக்கும் இனிய தைப் பொங்கல் + உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
தளத்தில் எல்லாமே புதிதாக அழகாக உள்ளது. பொங்கல் வாழ்த்துகள்.
தங்களின் பொங்கல் நல்வாழ்த்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே!
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே! புத்தாண்டு முதல் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து
தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி புலவர் ஐயா! தங்களுக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!