ஞாயிறு, 25 நவம்பர், 2012

பெண் மண் எப்போதும் புதிர்!


என்ன செய்வது
என்னைப் போலவே
எச்சரிக்கையாய்
இருந்ததில்லை
காதலும்...

உன் ஆறுதலைக்
கேட்பதற்காகவே
அதிகமாய் அழுதுபார்க்க
ஆசைப்பட்டவன் நான்
இப்போது
அதிகமாய் சிரித்துப்
பார்க்க ஆசைப்படுகிறேன்
நீ விட்டுப்போனதை
மறந்துவிட!

அது எப்படி
பெண்மையைப் போலவே
உணர்வுகளையும்
ஒளித்துக்கொள்ள
முடிகிறது?
திறமைதான்!

நேசிப்பாயா
தூரமாய் நானிருந்தால்
கொஞ்சம் பொறு
தொலைந்து போகிறேன்.

நியாயமானதுதான்
கோபம்
மரித்துவிடுவதற்குமுன்
மறந்துவிடுவது நல்லதுதான்
இப்போது போலவே
சிதையிலும் மலரும் இதயம்.

பெண்
மண்
எப்போதும் புதிர்!
எதுவும் எப்போதும்
முடியும்
நானும் நீயும் கூட!


6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

உண்மை தாங்க... எப்போதும் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமம் தான்...
tm2

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஆம்! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

மகேந்திரன் சொன்னது… [Reply]

உண்மை உண்மை....
அந்தப் புதிர்களை விடுவிக்கும்
சமயங்களே இங்கே
வாழ்வின் பெரும்பங்கு....

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

மிகச் சரி மகேந்திரன் அவர்களே! மரணம் வரை உடன் வாழ்ந்தாலும் மனைவியைக்கூட புரிந்துகொள்ள முடியாத வாழ்க்கையிது!

உஷா அன்பரசு சொன்னது… [Reply]

// உன் ஆறுதலைக்
கேட்பதற்காகவே
அதிகமாய் அழுதுபார்க்க
ஆசைப்பட்டவன் //

அழகான வரிகள்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி உஷா அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!