அன்பிருந்தவளே!
நீ
அனுப்பிய மடல் கிடைத்தது
வரிவடிவம் தானே வழக்கம்
எப்படி உனக்கு
எழுத வருகிறது
வலி வடிவத்தில்?
உன் ஒற்றைக் கடிதம்
பிப்ரவரி14 ஐ
என்
எல்லா நாட்காட்டியிலும்
கிழித்து விட்டதே
தலைவி!
நான் மட்டும்தான்
அஞ்சல் பெட்டியில்
புதைக்கப்பட்டவன்
நீ
பதிலாய் அனுப்பிய
இந்த மடலே
என் வாழ்க்கையைக்
கேள்வி யாக்கிவிட்டது.
சொல்லிவிடு!
காதலை
மத்த்தின் பெயரால்
மறுத்த
இந்த மடலை
என்ன செய்வது…
உன் மதப்படி புதைப்பதா…?
என் மதப்படி எரிப்பதா…?
- நெல்லை ஜெயந்தா

super vaalththukkal
பதிலளிநீக்குகாதலாய் கனவாய் வாழட்டுமே .
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மதுரை சரவணனன்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்திற்கும் நன்றி சசிகலா!
பதிலளிநீக்கு